MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 10 Rupee Note Bundle: மொய் வைக்க 10 ரூபாய் நோட்டுகள் தேவையா? பேங்க்ல இப்படி ஈஸியா வாங்கலாம்!

10 Rupee Note Bundle: மொய் வைக்க 10 ரூபாய் நோட்டுகள் தேவையா? பேங்க்ல இப்படி ஈஸியா வாங்கலாம்!

10 Rupee Note Bundle: கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள் என பல நிகழ்ச்சிகளில் மொய் அல்லது தட்சணைக்காக 10 ரூபாய் நோட்டுகள் அதிகம் தேவைப்படும். தேவையான அளவுக்கு சேர்ப்பது பலருக்கும் சிரமமாக இருக்கும். அதனை பெறுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 15 2026, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
10 ரூபாய் நோட்டு பண்டல்
Image Credit : ChatGPT

10 ரூபாய் நோட்டு பண்டல்

கல்யாணம், கோயில் விசேஷம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மொய் அல்லது தட்சணைக்காக 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள் தேவைப்படுவது வழக்கம். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சின்ன நோட்டுகளுக்கான தேவை தொடர்ந்து உள்ளது. தேவையான அளவு நோட்டுகளை ஒரே நேரத்தில் பெறுவது சிரமமாக இருக்கும் நிலையில், வங்கிக் கிளைகளை அணுகுவது ஒரு வழியாகும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் விதிமுறைகளின்படி, வங்கிக் கிளைகள் நல்ல தரமான நோட்டுகள் மற்றும் நாணயங்களை வழங்குவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பேங்க்ல எப்படி வாங்கலாம்?
Image Credit : our own

பேங்க்ல எப்படி வாங்கலாம்?

உங்களுக்கு 10 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் தேவைப்பட்டால், அருகில் உள்ள வங்கிக் கிளையை நேரடியாக அணுகி கேட்கலாம். அந்த கிளையில் தேவையான அளவு 10 ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் இருந்தால், வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். அதிக அளவு, கடைசி நேரத்தில் செல்வதை விட முன்கூட்டியே கிளையைத் தொடர்புகொண்டு தேவையைத் தெரிவிப்பது நடைமுறையில் உதவியாக இருக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான 10 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொரு கிளையிலும் எப்போதும் தயாராக இருக்கும் என்று கூற முடியாது.

35
வாடிக்கையாளர்கள் மட்டும்தான் வாங்க முடியுமா?
Image Credit : our own

வாடிக்கையாளர்கள் மட்டும்தான் வாங்க முடியுமா?

இதில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. ஆர்பிஐ-யின் தற்போதைய வழிகாட்டுதலின்படி, நோட்டு மற்றும் நாணய பரிமாற்ற வசதிகளை வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இந்த வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, பிற பொதுமக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆர்பிஐ குறிப்பிடுகிறது. அனைத்து கிளைகளும் வேலை நாட்களில் இந்த வசதிகளை வழங்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன. எனவே சின்ன நோட்டுகள் முதலில் அருகிலுள்ள வங்கிக் கிளையிடம் விசாரிப்பது சரியான வழியாகும்.

Best Selling Scooters: ஆகஸ்டில் அதிகம் விற்ற ஸ்கூட்டர்கள் எவை? வாங்கும் முன் இந்த டாப் 5 லிஸ்ட்டை பாருங்க

45
10 ரூபாய் நோட்டு இன்று புழக்கத்தில் உள்ளதா?
Image Credit : our own

10 ரூபாய் நோட்டு இன்று புழக்கத்தில் உள்ளதா?

ஆம். ரூ.10 நோட்டு தற்போது புழக்கத்தில் உள்ள இந்திய ரூபாய் நோட்டுகளில் ஒன்றாகும். ஆர்பிஐ-யின் 2025 FAQ-ல் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 உள்ளிட்ட நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கல்யாணம் அல்லது விசேஷத்துக்காக 10 ரூபாய் நோட்டுகள் தேவைப்படுபவர்கள் வங்கியில் கிடைக்கிறதா என்று கேட்டு வாங்கலாம்.

55
நோட்டுகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியது
Image Credit : our own

நோட்டுகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியது

கட்டாக நோட்டுகளைப் பெற்றவுடன் எண்ணிக்கையை சரிபார்ப்பது நல்லது. ரூ.10 நோட்டுகள், எந்தப் பணத்தையும் பெறும்போது அதன் மதிப்பு மற்றும் எண்ணிக்கையை சரிபார்த்துக்கொள்ளலாம். கள்ளநோட்டை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை ஆர்பிஐ வழங்குகிறது. மேலும், நோட்டுகளை அடையாளம் காண உதவும் ஆர்பிஐயின் செயலி இருந்தாலும், அது உண்மையானதா அல்லது கள்ளநோட்டா என்பதை உறுதி செய்யும் கருவி அல்ல என்று ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது. எனவே அதிக அளவு சின்ன நோட்டுகள் தேவைப்பட்டால், முன்கூட்டியே வங்கியை அணுகுவது பாதுகாப்பானதும் நடைமுறைக்கு ஏற்றதுமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய நாணயம்
வங்கி
வங்கி விதிகள்
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
காப்பீட்டுடன் சேர்த்து சேமிப்பும் தரும் எல்.ஐ.சி நிவேஷ் பிளஸ்: யார் யாருக்கு இது ஏற்றது?
Recommended image2
LPG Booking Rules: நவம்பர் 1 முதல் கேஸ் புக்கிங் விதிகள் என்ன? ஆதார் e-KYC செய்யாவிட்டால் மானியம் கிடைக்குமா?
Recommended image3
Firecracker Insurance: தீபாவளிக்கு பட்டாசு காப்பீடு வெறும் ₹11 தான்! PhonePe-ன் அதிரடி கிப்ட்..!
Related Stories
Recommended image1
House Construction : 1000 சதுர அடியில் மாடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!
Recommended image2
Bank Loan: வங்கிக் கடன் வாங்குவோர் கவனத்திற்கு... இனி அலைச்சல் இல்லை... எல்லாமே டிஜிட்டல் மயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved