ரூ.15,000 இருந்தால் போதும்; மாதம் ரூ.50,000 பென்ஷன்; மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
மாதம் ரூ.50,000 பென்ஷன் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
National Pension System
ஒருவர் வேலையில் இருந்து தனது 60 வயதில் ஓய்வு பெறும்போது, அதன்பிறகு அவருக்கு நிதி ஆதாரமாக இருப்பது ஓய்வூதியமாகும். பெரும்பாலானோருக்கு இந்த ஓய்வூதிய தொகை குறைவாக இருப்பதாலும், 60 வயதுக்கு மேல் வேறு வருமானம் கிடைக்காததாலும் அன்றாட செலவுக்கு அல்லாடுகின்றனர்.
இந்த குறையை போக்கும்விதமாக இருப்பதுதான் என்பிஎஸ் (NPS)எனப்படும் மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System) ஆகும். மத்திய அரசின் என்பிஎஸ் திட்டத்தில் டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகை கணக்குகள் உள்ளன. இதில் டயர் 1 கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அதே வேளையில் டயர் 2 கணக்கை தொடங்குவதற்கு டயர் 1 கணக்கு வைத்திருப்பது அவசியமாகும்.
NPS Provide Monthly pension
இந்த திட்டத்தின்படி ஒருவர் மாதம்தோறூம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். 60 வயதில் ஓய்வுபெறும்போது முதலீடு செய்த தொகையில் மொத்தம் 60% அவருக்கு மொத்தமாக கையில் கிடைக்கும். மேலும் முதலீட்டு பணத்தில் 40% ஆண்டுத்தொகையாக கணக்கிடப்படும். இந்த ஆண்டுத்தொகையை வைத்தே உங்களின் பென்ஷன் கணக்கிடப்படும்.
Cash Withdrawal Rules: வங்கிக் கணக்கில் இருந்து பெரிய தொகையை எடுப்பது எப்படி?
Central Government Scheme
உதாரணத்துக்கு என்பிஎஸ் திட்டத்தில் ஒருவர் தனது 35வது வயதில் இருந்து மாதம்தோறும் ரூ.15,000 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். அவர் தனது 60 வயது நிறைவு பெறும்வரை 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.15,000 முதலீடு செய்தால் அவரின் மொத்த முதலீட்டு தொகை ரூ.45,00,000 ஆக இருக்கும். இதறகான வட்டி தொகை ரூ.1,55,68,356 ஆகும். இரண்டையும் சேர்த்து கணக்கிட்டால் மொத்தம் ரூ.2,00,68,356 கிடைக்கும்.
State Government Scheme
இந்தத் தொகையில் 60% ரூபாய் அதாவது ரூ.1,20,41,013 அவரின் 60 வயதாகும்போது மொத்தமாக கிடைக்கும். மேலும் மொத்த தொகையில் 40% ஆண்டுத் தொகையாக ரூ.80,27,342 இருக்கும். இதில் 8% வட்டியை சேர்த்தால் மாதம்தோறும் ரூ.53,516 பென்ஷன் கிடைக்கும்.
நான் மேலே குறிப்பிட்டு இருப்பது ஒரு உதாரணம்தான். நீங்கள் மாதம்தோறும் செய்யும் முதலீட்டுத் தொகையை பொறுத்தே உங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் 60% தொகையும், மாதம்தோறும் வழங்கப்படும் பென்ஷனும் கணக்கிடப்படும்.
வெறும் ரூ. 59-ல் டெங்கு, மலேரியாவுக்கு PhonePe காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்; சேர்வது எப்படி?