- Home
- Business
- Gold Rate Today : ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
Gold Rate Today : ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.45,000க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25குறைந்து ரூ.5,625க்கு விற்பனையானது.
இன்றைய (மே 20) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,680ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,147ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,176ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 79,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.