- Home
- Business
- Gold Rate Today : இப்படியே போனா தங்கம் வாங்க முடியாது போலயே.. இன்றைய தங்கம் & வெள்ளி நிலவரம்.!!
Gold Rate Today : இப்படியே போனா தங்கம் வாங்க முடியாது போலயே.. இன்றைய தங்கம் & வெள்ளி நிலவரம்.!!
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை பார்க்கலாம்.

தொடர்ந்து தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதன் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது. சமீபத்தில் தங்கத்தின் விலை புது உச்சத்தை தொட்டது என்று கூறலாம்.
சவரனுக்கு 44 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மக்கள் தங்கத்தை தொடர்ந்து வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு 40 உயர்ந்து 5,540க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் சவரனுக்கு உயர்ந்து 560 உயர்ந்து 44,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் திடீர் விலையேற்றம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்றைய (24 மார்ச்) நிலவரப்படி, சவரனுக்கு 160 உயர்ந்து 44,480 விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல தங்கம் கிராமுக்கு 20 உயர்ந்து 5,560க்கு விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 75.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.