MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காலி பாட்டில் குப்பைன்னு நினைச்சீங்களா? பணம் கொட்டும் ரகசியம் இதோ!

காலி பாட்டில் குப்பைன்னு நினைச்சீங்களா? பணம் கொட்டும் ரகசியம் இதோ!

உங்கள் வீட்டில் சேர்ந்து கிடக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை அல்ல. சரியாக பயன்படுத்தினால் அது ஒரு சிறிய வருமானம் தரக்கூடியதாக மாறும். அது எப்படி என்று விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 07 2026, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
பிளாஸ்டிக் பாட்டில் பிசினஸ்
Image Credit : Google

பிளாஸ்டிக் பாட்டில் பிசினஸ்

உங்கள் வீட்டில் சேர்ந்து கிடக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை அல்ல. சரியாக பயன்படுத்தினால் அது ஒரு சிறிய வருமானம் தரக்கூடியதாக மாறும். இன்றைய நகர வாழ்க்கையில் இடப்பற்றாக்குறை அதிகம். அதனால் தான் “வெர்டிகல் கார்டன்” என்ற செங்குத்துத் தோட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வேகமாக உயர்ந்து வருகிறது. பால்கனி சுவர்களில் பசுமை சேர்க்க விரும்பும் பலர், வித்தியாசமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்டன் செட்களை தேடுகிறார்கள். இந்த தேவைதான் உங்கள் பிசினஸ் வாய்ப்பாக மாறலாம்.

வெர்டிகல் கார்டன் பிசினஸ் என்பது, பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை அழகான செடி தொட்டிகளாக மாற்றி விற்பதே. நிலம் இல்லாத வீடுகளில் கூட சுவர்களில் செடிகளை வளர்க்க இது உதவும். நீங்கள் பாட்டில்களை வெட்டி, அதற்கு கலைநயம் சேர்த்து, சிறிய செடிகளை நட்டு “ரெடி-டு-யூஸ்” கார்டன் செட்களை உருவாக்கலாம். பார்ப்பதற்கு அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கும் இந்த தயாரிப்புகள் வீட்டை புதுமையாக மாற்றும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
22
வெர்டிகல் கார்டன் பிசினஸ்
Image Credit : Google

வெர்டிகல் கார்டன் பிசினஸ்

இந்த பிசினஸை தொடங்குவது மிகவும் சுலபம். முதலில், 1 அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி பாட்டில்களை சேகரிக்க வேண்டும். பழைய பேப்பர் கடைகள் அல்லது ஸ்கிராப் கடைகளில் இதை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதன் பிறகு, பாட்டில்களை வெட்டி அல்லது துளையிட்டு, ஒரு செடி தொட்டியின் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். இதில்தான் உங்கள் கலை திறமை வேலை செய்கிறது. கார்ட்டூன், ஜியாமெட்ரிக் டிசைன் அல்லது இயற்கை வடிவங்கள் போன்றவற்றை உருவாக்கலாம்.

அடுத்து வரும் முக்கியமான கட்டம் பெயின்ட்டிங். பிரகாசமான வண்ணங்கள், அழகான டிசைன்கள் தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அக்ரிலிக் அல்லது ஆயில் பெயின்ட் பயன்படுத்தி பாட்டில்களை அலங்கரிக்கலாம். பின்னர், மணி பிளான்ட், கற்றாழை போன்ற சிறிய செடிகளை நட்டு விற்பனைக்கு தயாராகலாம். செடியுடன் கூடிய தயாரிப்புகளுக்கு சந்தையில் அதிக மதிப்பு கிடைக்கும். தயாரிப்பு செலவு மிகக் குறைவு என்றாலும், ஒரு செட்டை ரூ.150 முதல் ரூ.300 வரை விற்க முடியும்.

விற்பனைக்கு பல வழிகள் உள்ளன. அருகிலுள்ள நர்சரிகளுக்கு சப்ளை செய்யலாம் அல்லது Instagram, WhatsApp, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் தயாரிப்புகளைப் பகிரலாம். மேலும், ஆன்லைன் மார்க்கெட்ப்ளேஸ்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளிலும் விற்பனை செய்யலாம். “Go Green” என்ற எண்ணம் அதிகரித்து வரும் நிலையில், மறுசுழற்சி செய்யப்பட்ட இந்த கார்டன் செட்களுக்கு நல்ல தேவை உள்ளது. குறைந்த முதலீட்டில் தொடங்கி, படைப்பாற்றலுடன் வளர்த்தால் இது ஒரு சிறந்த ஹோம் பிசினஸாக மாறும்.

Related Articles

Related image1
இந்தியன் ரயில்வேயில் வேலை; ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?
Related image2
அரசு வேலை மட்டும் இல்ல… இந்த வேலைகளில் லட்சம் சம்பளம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிக யோசனை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ITR : பான் மட்டும் போதாது.. ஐடிஆர்க்கு கட்டாயம் தேவைப்படும் 5 முக்கிய ஆவணங்கள்.. முழு லிஸ்ட்
Recommended image2
பிஸ்னெஸ் சீக்ரெட்.! வெள்ளி வாங்குனா எப்போ, எப்படி வரி கட்டனும் தெரியுமா?!
Recommended image3
Lockdown : மீண்டும் ‘லாக்டவுன்’ மாதிரி கட்டுப்பாடுகளா? மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு
Related Stories
Recommended image1
இந்தியன் ரயில்வேயில் வேலை; ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
அரசு வேலை மட்டும் இல்ல… இந்த வேலைகளில் லட்சம் சம்பளம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved