MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரே ஒரு முறை டெபாசிட், 2 லட்சத்துக்கு மேல் லாபம்! இது மத்திய அரசின் ஸ்பெஷல் திட்டம்!

ஒரே ஒரு முறை டெபாசிட், 2 லட்சத்துக்கு மேல் லாபம்! இது மத்திய அரசின் ஸ்பெஷல் திட்டம்!

தபால் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் மேல் முதிர்வுத் தொகையைப் பெறலாம்.

2 Min read
SG Balan
Published : Nov 24 2024, 08:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சேமிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முதலீடு செய்யும்போது பணத்திற்கான பாதுகாப்புடன் நல்ல வட்டியும் கிடைக்கிறது.  அந்த கையில் பெண்களுக்கான சிறப்புத் திட்டம் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

27
mahila samman

mahila samman

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் தபால் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபத்தை ஈட்டலாம்.

37
You can soon open Mahila Samman Savings Account at these PSU, private banks

You can soon open Mahila Samman Savings Account at these PSU, private banks

இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வருமானம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரே ஒரு முறை மொத்தத் தொகையை டெபாசிட் செய்தால் போதும். இத்திட்டம் FD போலவே செயல்படுகிறது. ஆனால் வட்டியை அதிகமாகத் தருகிறது என்பது இதன் சிறப்பு அம்சம்.

47

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகையைப் பெறலாம். ஆனால் இத்திட்டத்தில் பெறப்படும் வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும். ஏனெனில் பெறப்பட்ட வட்டியில் TDS கழிக்கப்படும்.

57

தற்போது மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் ரூ.1000 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட பணம் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.

67

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் அதிகபட்ச லாபத்தைப் பெற 2 லட்சம் ரூபாய் ஒரே முறை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். 2 ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வு அடையும்போது, முதலீடு செய்த 2,00,000 ரூபாய்க்குப் பதிலாக ரூ. 2,32,044 கிடைக்கும். இதில் வட்டி மட்டும் ரூ.32,044 ஆகும்.

77
Mahila Samman Saving Certificate Scheme- 7.5% Interest Rate, Check Launch Date, Investment Limit

Mahila Samman Saving Certificate Scheme- 7.5% Interest Rate, Check Launch Date, Investment Limit

இதே திட்டத்தில் ரூ. 1,00,000 முதலீடு செய்தால், 2 வருடம் கழித்து முதிர்வுக் காலத்தில் ரூ. 1,16,022 ஈட்டலாம். இதில் ரூ.16,022 வட்டியும் அடங்கும். ரூ. 1,50,000 டெபாசிட் செய்யும்போது, ரூ. 1,74,033 முதிர்வுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
அஞ்சல் அலுவலகம்
பெண்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்! பிரதமர் மோடி பெருமிதம்!
Recommended image2
Business: ரூ.5,000 முதலீட்டில் ரூ.50,000 வரை சம்பாதிக்கும் சூப்பர் தொழில்.! பெண்களே களத்தில் இறங்கி கலக்கலாம் வாங்க.!
Recommended image3
Investment: வெள்ளி இருக்கும் போது தங்கம் எதுக்கு.! அள்ளி கொடுக்க போகும் வெள்ளியை இனி தள்ளி வைக்க வேண்டாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved