MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • LPG Gas Price: 4 மாதங்களுக்கு பிறகு உயர்ந்தது கேஸ் சிலிண்டர் விலை! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

LPG Gas Price: 4 மாதங்களுக்கு பிறகு உயர்ந்தது கேஸ் சிலிண்டர் விலை! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Aug 01 2024, 07:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Commercial Cylinders

Commercial Cylinders

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 

24
Gas Cylinder Price

Gas Cylinder Price

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்தது. 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

34
Commercial LPG Cylinder Rate

Commercial LPG Cylinder Rate

இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.  19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.7.50 காசுகள் உயர்ந்து ரூ.1,817க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

44
Domestic Use Cylinder

Domestic Use Cylinder

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எரிவாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
லட்சக்கணக்கில் மிச்சப்படுத்தலாம்..! குறைந்த விலையில் கார் வாங்கணுமா..? ஷோரூம்கள் தரும் மெகா ஆஃபர்
Recommended image2
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! சரசரவென குறையும் விலையால் குஷியில் இல்லத்தரசிகள்!
Recommended image3
ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்கலாம்!.. டோல் பிளாசாவில் கிடைக்கும் இலவச சேவைகள் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved