அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு!
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிலவரத்தை இங்கே பார்க்கலாம்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 1ம் தேதியான இன்று சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. LPG Cylinder Rate
Oil Companies
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுகிறது.
LPG Cylinder Price
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து உயர்ந்து வந்தது. பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
Commercial LPG Cylinder
இந்நிலையில், மார்ச் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு மாதங்களுக்கு பிறகு உயர்த்தியுள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.5.50 காசுகள் உயர்ந்து ரூ.1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால் பால், டீ மற்றும் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
cooking gas price
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.