MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஆதார் கார்டு தொலைந்ததா? இப்படி செய்தால் உடனே கிடைக்கும்!

ஆதார் கார்டு தொலைந்ததா? இப்படி செய்தால் உடனே கிடைக்கும்!

ஆதார் கார்டு திடீரென தொலைந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் பதறி போகிறார்கள். அதிலும் ஆதார் நம்பரையே மறந்துவிட்டால் இன்னும் பெரிய பிரச்சனை போல தோன்றும்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 30 2026, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆதார் இல்லாமலேயே நம்பர் பெறலாம்
Image Credit : Google

ஆதார் இல்லாமலேயே நம்பர் பெறலாம்

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு நபருக்கும் அத்தியாவசிய அடையாள ஆவணமாக உள்ளது. அரசு நலத்திட்டங்கள் பெறுவது முதல் வங்கி கணக்கு திறப்பு, சிம் கார்டு வாங்குதல் வரை பல சேவைகளுக்கு ஆதார் அவசியமாகிறது. அதனால் இதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் ஆதார் கார்டு காணாமல் போகலாம் அல்லது அந்த எண்ணையே மறந்து விடலாம்.

25
ஆதார் இல்லாமலேயே நம்பர் பெறலாம்
Image Credit : Asianet News

ஆதார் இல்லாமலேயே நம்பர் பெறலாம்

இப்படி ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலைப்பட தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே உங்கள் ஆதார் விவரங்களை மீண்டும் பெறலாம். UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் ஆதார் எண்ணை மீட்டெடுக்க முடியும். எங்கும் சென்று சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.

Related Articles

Related image1
ரூ.10 லட்சம் லோன்… திருப்பிச் செலுத்த வேண்டியது குறைவு! கூட்டுறவு வங்கி புதிய சலுகை
Related image2
குட்நியூஸ்.! ரூ.5000 வங்கி கணக்கில் போடும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் தெரியுமா?
35
மொபைல் இணைப்பு ஆதார்
Image Credit : Google

மொபைல் இணைப்பு ஆதார்

முதலில் UIDAI இணையதளத்தை திறந்து, “இழந்த அல்லது மறந்துவிட்ட UID/EID ஐ மீட்டெடுக்கவும்” என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் பெயர், மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவு செய்து OTP பெற வேண்டும். அந்த OTP-ஐ உள்ளிட்டவுடன், உங்கள் ஆதார் எண் SMS மூலம் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும்.

45
ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி?
Image Credit : Google

ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி?

அதற்குப் பிறகு, அதே இணையதளத்தில் “Download Aadhaar” என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி e-Aadhaar பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் ஆதார் எண் மற்றும் பிற விவரங்கள் உள்ளிட்டு PDF கோப்பை டவுன்லோட் செய்யலாம். அந்த கோப்பை திறக்க உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் மற்றும் பிறந்த தேதி பயன்படுத்த வேண்டும்.

55
ஆதார் தொலைந்தாலும் கவலை வேண்டாம்
Image Credit : Gemini

ஆதார் தொலைந்தாலும் கவலை வேண்டாம்

பாதுகாப்பு கருதி “Masked Aadhaar” பயன்படுத்துவது நல்லது. இதில் கடைசி 4 இலக்கங்கள் மட்டும் தெரியும், இதனால் தவறான பயன்பாடு தடுக்கப்படும். மேலும், உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். எப்போதும் உங்கள் ஆதாரின் soft copy-யை மொபைல் அல்லது மின்னஞ்சலில் வைத்திருக்கவும். biometric lock வசதி பயன்படுத்தினால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆதார் அட்டை
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Schemes : பாதுகாப்பான முதலீடு தேடுறீங்களா? அதிக வட்டி தரும் 9 அரசு திட்டங்கள்.! 100% பாதுகாப்பு, பணத்துக்கு முழு உத்தரவாதம்.!
Recommended image2
ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் கிடைக்காதா? ரயில்வே அதிரடி ரூல்.. ஏப்ரல் 1 முதல் ஆரம்பம்
Recommended image3
மார்ச் 31க்கு முன்.. இந்த 5 வேலைகளை முடிங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்
Related Stories
Recommended image1
ரூ.10 லட்சம் லோன்… திருப்பிச் செலுத்த வேண்டியது குறைவு! கூட்டுறவு வங்கி புதிய சலுகை
Recommended image2
குட்நியூஸ்.! ரூ.5000 வங்கி கணக்கில் போடும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved