MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வருமானச் சான்று இல்லாமலே பெர்சனல் லோன் கிடைக்குமா? வழிமுறைகள் என்னென்ன?

வருமானச் சான்று இல்லாமலே பெர்சனல் லோன் கிடைக்குமா? வழிமுறைகள் என்னென்ன?

Personal loan without salary proof: சீரான வருமானம் இல்லாதவர்களிடம் வருமானச் சான்று ஆவணங்கள் இருக்காது. அவர்கள் தனிநபர் கடனை எப்படிப் பெறலாம், அதற்கான என்னென்ன வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Sep 21 2024, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

அவசர மருத்துவச் செலவு, தனிப்பட்ட செலவுகள், வீட்டைப் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு விரைவாகப் பணம் திரட்ட வேண்டிய தேவை ஏற்படும்போது, ​​தனிநபர் கடன்கள் கைகொடுக்கும். ஆனால், அதற்கு சம்பளச் சான்று கேட்பது வழக்கம். இதனால் பெர்சனல் லோன் கேட்டு விண்ணப்பிக்கும் பலர் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211

இதுபோன்ற நிலைகளில், சம்பளச் சான்று இல்லாமல் பெர்சனல் லோன் பெற பல வழிகள் உள்ளன. சில வழிகளில் கடன் பெறுதவற்கான செயல்முறை மிகவும் எளிமையாக இருக்கும். குறிப்பாக ஆன்லைன் லோன் அப்ளிகேஷன்கள் விஷயத்தில் செயல்முறை சீக்கரமாக முடிந்துவிடுகிறது.

311
Make Your Dream Vacation A Reality With A Personal Loan

Make Your Dream Vacation A Reality With A Personal Loan

சம்பளம் பெறும் நபராக இருந்தால், க்ரெடிட் ஸ்கோர் மற்றும் பான் கார்டு மூலமே கடன் வழங்குபவர்களுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிடும். அப்போது, வருமானச் சான்று எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. சுயதொழில் செய்பவராகவோ, ஃப்ரீலான்ஸராகவோ அல்லது அமைப்புசாரா ஊழியர்களாகவோ இருந்தால், உங்கள் வருமானத்தை உறுதிசெய்யும் மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

411

பொதுவாக, வருமானத்தைச் சரிபார்க்கும் நோக்கத்திற்காக வங்கி அறிக்கைகள் அல்லது பணிச் சான்றிதழை கடன் வழங்குநர்கள் கோருகின்றனர். பெரும்பாலான வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனைத் தீர்மானிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர். தனிநபர் கடன் பெறும்போது சில சமயங்களில் சம்பளச் சான்று மட்டுமின்றி, அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் வருமான வரிக் கணக்குகள் (ITR) ஆகியவற்றையும் கேட்கலாம்.

511

ஆனால், ஃப்ரீலான்ஸர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது சீரான வருமானம் இல்லாதவர்களிடம் அத்தகைய ஆவணங்கள் இருக்காது. அவர்கள் சம்பளச் சான்று இல்லாமலே தனிநபர் கடனைப் பெறலாம். அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன, எப்படிப் பெறலாம் என்று பார்க்கலாம்.

611
4 Smart Tips to Enhance Your Personal Loan Eligibility

4 Smart Tips to Enhance Your Personal Loan Eligibility

ஆன்லைன் லோன் ஆப்ஸ்: ஆன்லைன் தனிநபர் கடன் செயலிகள் பொதுவாக சம்பளச் சான்றுகளைக் கேட்பதில்லை. சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கியின் க்ரெடிட் ஸ்கோர் அடிப்படையில் கடன் தகுதியை மதிப்பிடுவார்கள். சில சந்தர்ப்பங்களில், கூடுதல் தகவலுக்காக வங்கி அறிக்கைகளைப் பதிவேற்றுமாறு கேட்கக்கூடும். ஆனால், ஆன்லைனில் கடன் பெறுவது பல சமயங்களில் சைபர் மோசடிகளில் சிக்கவும் வழிவகுக்கிறது. இதுபோன்ற வழக்குகள் இப்போது அதிகமாகவே பதிவாகி வருவதால் ஆன்லைனில் லோன் வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

711

மாற்று வருமானச் சான்று: சம்பளச் சான்று இல்லாவிட்டால் வருமானத்திற்கான மாற்றுச் சான்று ஒன்றை வழங்கலாம். சுயதொழில் செய்பவராக இருந்தால், வழக்கமான டெபாசிட்கள், வருமான வரி அறிக்கைகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் ஆகியவை தனிநபர் கடன் ஆவணங்களாக ஏற்கப்படலாம். இந்த ஆவணங்கள் கடன் பெறுபவரின் திருப்பிச் செலுத்தும் திறன் பற்றிய உறுதிப்பாட்டை அளிக்கின்றன.

811

பிணையக் கடன்: பிணையத்துடன் கூடிய தனிநபர் கடனைத் தேர்ந்தெடுப்பது சம்பளச் சான்று இல்லாதவர்களுக்கு இருக்கும் இன்னொரு ஆப்ஷன். இந்த வகைக் கடன்களைப் பெற ரியல் எஸ்டேட், பிக்ஸட் டெபாசிட் அல்லது தங்கம் போன்றவை சொத்துக்களை கடனுக்கான பிணையாக பயன்படுத்துகின்றன.

911

இன்னொருவருடன் கூட்டாக விண்ணப்பித்தல்: தனிநபர் கடன் கிடைக்கும் அளவுக்குச் சம்பளம் பெறாதவர் என்றால், நிலையான வருமானம் உள்ள இன்னொருவரை இணை விண்ணப்பதாரராகச் சேர்ந்து விண்ணப்பிப்பது பெர்சனல் லோன் கிடைப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும். இணை விண்ணப்பதாரரின் சம்பளச் சான்று மற்றும் கடன் வரலாறு ஆகியவை உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை உறுதி செய்யும் ஆதாரமாக எடுத்துகொள்ளப்படலாம்.

1011
Instant Short-Term Loans vs. Personal Loans: When to Choose

Instant Short-Term Loans vs. Personal Loans: When to Choose

பியர்-டு-பியர் கடன் வழங்கும் தளங்கள்: வங்கிகளுடன் ஒப்பிடும்போது, பியர்-டு-பியர் கடன் வழங்கும் தளங்கள் மிகவும் நெகிழ்வான விதிமுறைகளைக் கொண்டவை. இவை இப்போது பிரபலமாகி வருகின்றன. இந்தத் தளங்கள் பெரும்பாலும் சிறிய அளவிலான தனிநபர் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. சம்பளச் சான்று இல்லாமலே, பிற வருமானம் அல்லது சொத்துக்கள் இருந்தால் அதை வைத்துக் கடன் கொடுக்கின்றனர்.

 

1111
Personal loan EMIs- Borrowers to pay Rs 518 more monthly EMI on Rs 5 lakh loan after repo rate hike, check calculations

Personal loan EMIs- Borrowers to pay Rs 518 more monthly EMI on Rs 5 lakh loan after repo rate hike, check calculations

வலுவான கிரெடிட் ஸ்கோர்: கிரெடிட் ஸ்கோர் வலுவாக இருந்தால், சில சமயங்களில் சம்பளச் சான்று இல்லாமலே கூட பெர்சனல் லோன் கிடைக்கலாம். சிறப்பான க்ரெடிட் ஸ்கோர் கடனைப் பொறுப்புடன் திரும்பச் செலுத்தும் வழக்கம் கொண்டவர் என்பதற்கான அடையாளமாக இருக்கும். இதன் மூலம் வருமானச் சான்று இல்லாமல் தனிநபர் கடன் கிடைக்கக்கூடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(10.3 ov)102/2
INDIND
(20.0 ov)191/8
NZ need 90 runs in 57 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission : ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம்! ரூ.1.12 லட்சம் வரை உயரும் அடிப்படைச் சம்பளம்? முழு கணக்கு இதுதான்!
Recommended image2
Gas Cylinder : கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை என்ன? முழு விவரம்!
Recommended image3
Government Schemes: ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள்! யாருக்கெல்லாம் என்னென்ன நன்மைகள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved