ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் நிரந்தர பென்ஷன்... எல்ஐசியின் சூப்பர் பாலிசி!
எல்ஐசியின் சரள் பென்ஷன் காப்பீடு ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் நிரந்தர பென்ஷன் வழங்குகிறது.
எல்ஐசி வழங்கும் சரல் பென்ஷன் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரே முறை பணத்தை முதலீடு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பலனைப் பெறலாம். மேலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி சரள் பென்ஷன் திட்டத்தில் பென்ஷன் கிடைப்பதற்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. திட்டத்தில் முதலீடு செய்தவுடன், பென்ஷன் பெறத் தொடங்கலாம்.
சரள் பென்ஷன் பாலிசியில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் 40 வயது ஆகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 80 வயதுக்குள் இருக்க வேண்டும். எனவே, 40 வயதிலிருந்தே பென்ஷன் வாங்கலாம்.
குறைந்தப்பட்ச பிரீமியம் தொகை மாதத்திற்கு ரூ.1,000 ரூபாய். அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. இதையே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.3000 ஆகவும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.6000 ஆகவும் செலுத்த வாய்ப்பு உண்டு. ஆண்டுதோறும் ரூ.12 ஆகவும் செலுத்தலாம்.
இந்த பாலிசியை எடுப்பதற்கு மருத்துவ பரிசோதனை செய்வதும் அவசியம் இல்லை எனபது குறிப்பிடத்தக்கது. அவசரத் தேவைக்காக டெபாசிட் செய்த தொகையை நடுவில் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. அதில் 5 சதவீதம் மட்டும் கழிக்கப்படும்.