MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தினமும் 45 ரூபாய் சேமித்தால் ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ்! சூப்பர் ஹிட் எல்ஐசி பாலிசி!

தினமும் 45 ரூபாய் சேமித்தால் ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ்! சூப்பர் ஹிட் எல்ஐசி பாலிசி!

ஒவ்வொரு நாளும் வெறும் 45 ரூபாய் சேமித்து எல்ஐசி ஜீவன் ஆனந்த் (LIC Jeevan Anand) பாலிசியில் டெபாசிட் செய்தால், ரூ.25 லட்சம் பணத்தைப் பெறலாம். இந்த பாலிசியில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

2 Min read
Author : SG Balan
| Updated : Nov 28 2024, 08:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
LIC Jeevan Anand Policy

LIC Jeevan Anand Policy

ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் இருந்து சிறு தொகையைச் சேமித்து, பெரிய நிதியைக் குவிக்க உதவும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) இன்சூரன்ஸ் பாலிசிகள்  மிகவும் பிரபலமானவை. எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் (LIC Jeevan Anand) ஒரு நாளைக்கு 45 ரூபாய் சேமிப்பதன் மூலம் 25 லட்சம் ரூபாய் தொகையைச் சேர்க்கலாம்.

26
LIC Policy

LIC Policy

குறைந்த பிரீமியத்தில் பெரிய நிதியைத் திரட்ட விரும்பினால், எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி (LIC Jeevan Anand Policy) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு வகையில் இது ஒரு டேர்ம் பாலிசி போன்றதுதான். இந்தத் திட்டத்தில், பாலிசிதாரர்கள் பல பலன்களைப் பெறுவார்கள். எல்ஐசியின் இந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம். அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

36
Jeevan Anand Policy

Jeevan Anand Policy

எல்ஐசி ஜீவன் ஆனந்த் (LIC Jeevan Anand) பாலிசியில், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1358 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.25 லட்சத்தைப் பெறலாம். தினசரி அடிப்படையில் பார்த்தால், தினமும் 45 ரூபாய் சேமிக்க வேண்டும். ஆண்டு அடிப்படையில் சேமிக்க வேண்டிய தொகை சுமார் 16,300 ரூபாய் இருக்கும். இந்த சேமிப்பை நீண்ட காலத்திற்குத் தொடர வேண்டும். ஒரு நாளைக்கு 45 ரூபாய் சேமித்து 35 வருடங்கள் முதலீடு செய்தால், இந்தத் திட்டம் முதிர்வடையும்போது, உங்களுக்கு ரூ.25 லட்சம் கிடைக்கும்.

46
LIC Jeevan Anand Policy Bonus

LIC Jeevan Anand Policy Bonus

எல்ஐசி ஜீவன் ஆனந்த் (LIC Jeevan Anand) பாலிசியில் 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.16,300 முதலீடு செய்தால், மொத்த டெபாசிட் தொகை ரூ.5,70,500 ஆகும். பாலிசி காலத்தின்படி, அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சமாக இருக்கும். இதனுடன் முதிர்வு காலத்திற்குப் பிறகு, ரூ.8.60 லட்சம் மறுசீரமைப்பு போனஸும், ரூ.11.50 லட்சத்திற்கான இறுதி போனஸும் வழங்கப்படும். எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் போனஸ் இரண்டு முறை வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு உங்கள் பாலிசி 15 வருடங்களாக இருக்க வேண்டும்.

56
LIC Policy Rider

LIC Policy Rider

எல்ஐசி ஜீவன் ஆனந்த் (LIC Jeevan Anand) பாலிசியில் பாலிசிதாரருக்கு வரி விலக்கு கிடைக்காது. ஆனால், பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன. விபத்து மரணம் மற்றும் ஊனமுற்றோர் ரைடர், விபத்து பலன் ரைடர், புதிய டேர்ம் இன்சூரன்ஸ் ரைடர் மற்றும் புதிய கிரிட்டிகல் பெனிபிட் ரைடர் என 4 வகையான ரைடர்கள் இந்தப் பாலிசியில் இருக்கின்றன.

66
LIC Jeevan Anand Nominee Benefits

LIC Jeevan Anand Nominee Benefits

எல்ஐசி ஜீவன் ஆனந்த் (LIC Jeevan Anand) பாலிசியில் இறப்பு பலனும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, பாலிசிதாரர் இறந்தால், நாமினி பாலிசியின் 125 சதவீத பலனைப் பெறுவார். அதே நேரத்தில், பாலிசி முதிர்ச்சியடைவதற்கு முன்பே பாலிசிதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு உறுதிசெய்யப்பட்ட காலத்திற்குச் சமமான பணம் கிடைக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டோல் பிளாசாக்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. NHAI மாஸ்டர் பிளான்!
Recommended image2
தினமும் 2 மணி நேரம் போதும்… லட்சங்கள் சம்பாதிக்க பெண்களுக்கு வாய்ப்பு
Recommended image3
தினமும் ரூ.100 முதலீடு செய்தால்.. 10, 20, 30, 40 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved