- Home
- Business
- Jio IPO: ரூ.13,000 இருந்தால் போதும்.. ஜியோ ஐபிஓ-வில் கைமேல் லாபம் கிடைக்குமா? சூப்பர் சான்ஸ்!
Jio IPO: ரூ.13,000 இருந்தால் போதும்.. ஜியோ ஐபிஓ-வில் கைமேல் லாபம் கிடைக்குமா? சூப்பர் சான்ஸ்!
Jio IPO: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ அக்டோபர் 21 முதல் 23 வரை திறக்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.13,428 ஆகும். முன்கூட்டியே விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதால் மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பங்குச்சந்தையில் பெரிய சாதனை படைக்கும் ஜியோ
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் பங்குச்சந்தையில் பெரிய சாதனை படைக்க தயாராகிவிட்டது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ அதிகாரப்பூர்வமாக தொடங்கும் முன்பே மார்க்கெட்டில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
முன்னணி பிசினஸ் செய்திகளின்படி, உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு ஆரம்பகட்ட டிமாண்ட் வந்துள்ளது. இது ரூ.30,200 கோடி மதிப்பிலான ஐபிஓ அளவை விட 8 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ரீடெய்ல் முதலீட்டாளர்களும் பல புரோக்கிங் தளங்களில் ஐபிஓ-க்கு முன்கூட்டியே அப்ளை செய்யலாம்.
ஆங்கர் புக் தொடங்கும் முன்பே முதலீடு
இந்த ரூ.2.5 லட்சம் கோடி என்பது முறையான ஐபிஓ சப்ஸ்கிரிப்ஷன் இல்லை என்றாலும், ஆங்கர் புக் திறக்கப்படும் முன்பே நிறுவன முதலீட்டாளர்கள் காட்டும் பெரிய ஆர்வத்தை இது காட்டுகிறது. வெல்த் ஃபண்டுகள், உலகளாவிய நீண்டகால முதலீட்டாளர்கள், உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆங்கர் புக் தொடங்கும் முன்பே முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
முக்கிய உலகளாவிய முதலீட்டாளர்களில் ஜிஐசி (GIC), நார்ஜஸ் பேங்க் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி, கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி, பிளாக்ராக், ஃபிடெலிட்டி மற்றும் கேபிடல் குரூப் ஆகியவை அடங்கும். உள்நாட்டில் எல்ஐசி (LIC), எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங்கள் ஜியோ ஐபிஓ-வில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
ரூ.13 ஆயிரம் இருந்தால் போதும்
மறுபுறம், ரீடெய்ல் முதலீட்டாளர்கள் பல புரோக்கிங் ஆப்களில் ஐபிஓ-க்கு இப்போதே அட்வான்ஸாக அப்ளை செய்யலாம். இப்படி முன்கூட்டியே அப்ளை செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் ஆர்டரை முன்னதாகவே போட முடியும். ஆனால், அக்டோபர் 21-ம் தேதி ஐபிஓ திறக்கப்பட்ட பிறகுதான் இது முறையான பிட்டிங் செயல்முறையின் ஒரு பகுதியாக மாறும்.
ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ-வில் ஒரு பங்கின் விலையை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயித்துள்ளனர். குறைந்தபட்சம் 12 பங்குகள் கொண்ட ஒரு லாட் வாங்க வேண்டும். அதிகபட்ச விலையின் அடிப்படையில் பார்த்தால், ஒரு லாட் வாங்க ரூ.13,428 முதலீடு செய்ய வேண்டும். இந்த ஐபிஓ அக்டோபர் 21-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி முடிவடைகிறது.
எந்த அளவுக்கு உண்மையான முதலீடாக மாறும்?
அதற்கு முன்னதாக, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான புக் செயல்முறை அக்டோபர் 19-ம் தேதி தொடங்குகிறது. பொது வெளியீட்டிற்கு முன்பாக நிறுவனங்கள் காட்டும் இந்த ஆரம்பகட்ட ஆர்வம், எந்த அளவுக்கு உண்மையான முதலீடாக மாறும் என்பதை ஆங்கர் ஒதுக்கீடு நமக்கு காட்டிவிடும். மொத்தத்தில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ பங்குச்சந்தையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்பு துறப்பு:
பங்குச்சந்தை மற்றும் ஐபிஓ முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் DRHP (Draft Red Herring Prospectus) ஆவணங்களை முழுமையாகப் படிக்கவும். இக்கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; இது அதிகாரப்பூர்வமான நிதி ஆலோசனையோ அல்லது பங்கு வாங்குவதற்கான பரிந்துரையோ அல்ல.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

