தங்க நகைகளை வாங்கும் போது இந்த மிஸ்டேக்கை பண்ணாதீங்க
நகை வாங்க விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். நகைக் கடைக்குச் செல்லும்போது, நகை விற்பனையாளர்கள் சில ரகசியங்களை மறைக்கிறார்கள். இதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். எனவே நகை வாங்குவதற்கு முன் இந்த 5 ரகசியங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் பணத்தை சேமிக்கலாம்.

நகை விற்பனையாளர்கள் “ஹால்மார்க் இருக்கு” என்று சொல்வார்கள், ஆனால் ஹால்மார்க் முழுமையான உத்தரவாதம் அல்ல. சில நேரங்களில் ஹால்மார்க் போலியாக இருக்கலாம் அல்லது நகையில் கலப்படம் இருக்கலாம். வாங்கும்போது BIS லோகோ மற்றும் 6 இலக்க ஹால்மார்க் எண்ணைச் சரிபார்க்கவும்.
Gold buying tips
பழைய நகை மாற்றும் சிக்கல்கள்
பழைய நகையை விற்க அல்லது மாற்றச் செல்லும்போது, நகை விற்பனையாளர்கள் அதன் விலையைக் குறைக்கிறார்கள். மேக்கிங் சார்ஜ், சேதம், பாலிஷிங் என்ற பெயரில் குறைக்கிறார்கள். வாங்கும்போது மாற்றுக் கொள்கையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Jewelry shopping secrets
மேக்கிங் சார்ஜில் லாபம்
நகை விற்பனையாளர்கள் மேக்கிங் சார்ஜில் லாபம் சம்பாதிக்கிறார்கள். வாங்குவதற்கு முன் மேக்கிங் சார்ஜ் நிலையானதா அல்லது எடைக்கு ஏற்ப மாறுபடுமா என்று கேளுங்கள். விலை மற்றும் மேக்கிங் சார்ஜை ஒப்பிட்டுப் பாருங்கள். இது உங்களது பணத்தை சேமிக்க உதவும்.
How to buy gold smartly
எடை அதிகரிக்கும் யுக்திகள்
சில நகை விற்பனையாளர்கள் நகையின் வடிவமைப்பில் எடையை அதிகரிக்கும்படி செய்கிறார்கள், உதாரணமாக தடிமனான அடிப்பகுதி, அதிக கற்கள். இதனால் நகை கனமாகத் தெரியும், நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே இதில் வாடிக்கையாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்.
Best way to buy gold jewelry
சலுகைகளிலும் மோசடி
கவர்ச்சிகரமான சலுகைகளுக்குப் பின்னால் அதிக விலை அல்லது குறைந்த தரம் இருக்கும். ஆசைப்பட்டுச் சரிபார்க்காமல் வாங்காதீர்கள். நீங்கள் நகையை வாங்குவதற்கு முன்பு நகைக்கடையின் விவரங்கள் மற்றும் வாங்கும் போது தங்கத்தை பற்றிய மேற்கண்ட புரிதல்கள் உங்கள் பணத்தை சேமிக்கும்.
7 பங்குகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆகுங்கள்! இல்லைனா வருத்தப்படுவீங்க!