MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 5 வருஷத்துக்கு மாதம் ரூ.9,250 வருமானம்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

5 வருஷத்துக்கு மாதம் ரூ.9,250 வருமானம்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) வழக்கமான வருமானத்தை ஈட்டுவதற்கான சிறந்த வழி. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளது. ஓய்வுக்குப் பிறகு நிதி ஆதாரத்தைப் பெற இந்தத் திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்யலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Nov 19 2024, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Post Office Schemes

Post Office Schemes

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) வழக்கமான வருமானத்தை ஈட்டுவதற்கான சிறந்த வழி. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளது. ஓய்வுக்குப் பிறகு நிதி ஆதாரத்தைப் பெற இந்தத் திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்யலாம்.

26
Post office Monthly Income Scheme

Post office Monthly Income Scheme

குறிப்பிட்ட தொகையை இத்திட்டத்தில் டெபாசிட் செய்தால் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வரை சம்பாதிக்கலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து இதே வருமானம் கிடைக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

36
Monthly Income Scheme Interest Rate

Monthly Income Scheme Interest Rate

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில், தனிநபராகவும் கூட்டாகவும் கணக்கு தொடங்கலாம். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9,00,000 டெபாசிட் செய்யலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம்.

46
Rs. 9250 Monthly Income

Rs. 9250 Monthly Income

இத்திட்டத்தில் வட்டி விகிதம் 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாத வருமானம் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையைப் பொறுத்தது. உதாரணமாக, அதிகபட்ச தொகையான ரூ.9,00,000 டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.5,550 வரை சம்பாதிக்கலாம். இன்னொரு குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து கூட்டுக் கணக்கு தொடங்கி ரூ.15,00,000 டெபாசிட் செய்தால், ரூ.9,250 மாத வருமானம் ஈட்டலாம்.

56
Post Office Savings

Post Office Savings

​​இந்தத் திட்டத்தில் முதிர்வுக் காலத்தில் கணக்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை. ஆனால், முதிர்ச்சி அடைந்தவுடன், டெபாசிட் செய்த பணத்தை திரும்பப் பெற்றதும், மீண்டும் புதிய கணக்கு தொடங்கி, இன்னும் 5 வருடத்திற்கு முதலீடு செய்யலாம். இதன் மூலம் தொடர்ந்து மாத வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

66
Post Office MIS benefits

Post Office MIS benefits

இந்திய குடிமக்கள் அனைவரும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் கணக்கு ஆரம்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு ஏற்கெனவே தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அல்லது புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்கியதும், இத்திட்டத்தில் சேரலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
முதலீடு
அஞ்சல் அலுவலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டோல் பிளாசாக்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. NHAI மாஸ்டர் பிளான்!
Recommended image2
தினமும் 2 மணி நேரம் போதும்… லட்சங்கள் சம்பாதிக்க பெண்களுக்கு வாய்ப்பு
Recommended image3
தினமும் ரூ.100 முதலீடு செய்தால்.. 10, 20, 30, 40 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved