இந்தியாவின் ஒரே தனியார் ரயில் நிலையம்; எங்கு உள்ளது?
இந்தியாவில் 7,308க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு தனியார் ரயில் நிலையம் மட்டுமே உள்ளது. அது எது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.

நம் இந்திய ரயில்வே உலகின் ஐந்து பெரிய ரயில்வே வலைப்பின்னல்களில் ஒன்றாகும். இந்தியாவில் 7,308க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன. தினமும் 13,000க்கும் மேற்பட்ட ரயில்களில் 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். அதிகப்படியான பயணிகள் பயணிப்பதால் இந்திய அரசின் அதிக வருவாய் ஈட்டும் துறையாக ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வே இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் மலிவான போக்குவரத்து முறையாகவும் உள்ளது.
indian railways
தனியார் ரயில் நிலையம்
இந்திய ரயில்வேயின் நிர்வாகத்தை இந்திய அரசே கவனித்து வருகிறது. நாட்டின் அனைத்து ரயில்களும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. ஆனால் இந்தியாவில் ஒரு தனியார் ரயில் நிலையம் உள்ளது. அது எதுவென்று தெரியுமா? இந்த ரயில் நிலையம் சர்வதேச தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தின் பெயர் ராணி கமலாபதி. முன்பு இது ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம் என்று அழைக்கப்பட்டது. 2021 நவம்பரில் ராணி கமலாபதி ரயில் நிலையம் என மறுபெயரிடப்பட்டது.
Private railway station
இந்த ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன?
பெரிய பார்க்கிங், 24*7 மின்சாரம், சுத்தமான குடிநீர், குளிர்சாதன வசதி கொண்ட அறைகள், அலுவலகம், கடைகள், அதிவேக எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆங்கர் ஸ்டோர், ஆட்டோமொபைல் ஷோரூம்கள், மாநாட்டு மையம், ஹோட்டல் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் போன்றவை உள்ளது.
India's first private railway station
இந்த ரயில் நிலையம் எங்கே உள்ளது?
ராணி கமலாபதி ரயில் நிலையம் மத்தியப் பிரதேசத்தின் ஹபிப்கஞ்சில் உள்ளது. இது புறநகர் போபாலில் உள்ளது. இந்த நிலையம் புது தில்லிக்கும் சென்னைக்கும் இடையே நேரடி இணைப்பை வழங்குகிறது. ஜூன் 2007 இல் இந்த நிலையம் தனியார்மயமாக்கப்பட்டது. பொது-தனியார் கூட்டாண்மையில் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் இணைந்து இந்த ரயில் நிலையத்தை உயர் தரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பன்சல் குழுமம் என்ற தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகம் (IRSDC) இணைந்து பணியாற்றுகின்றன. நவம்பர் 15, 2021 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்தார்.
First private railway station in India
ராணி கமலாபதி ரயில் நிலையம்
இந்த நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனம் செய்து வருகிறது, ஆனால் அது இந்திய அரசுக்குச் சொந்தமானது. ராணி கமலாபதி ரயில் நிலையத்தை மறுசீரமைக்க ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தனி நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18 ஆம் நூற்றாண்டின் கோண்ட் ராணி, துணிச்சலான மற்றும் போராளி ராணி கமலாபதியின் பெயர் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.