2025 இல் விமானப் பயணம் ரொம்ப சீப்பு... இண்டிகோவின் அதிரி புதிரி ஆஃபர்!
Indigo Getaway Sale: பட்ஜெட் விமான சேவையை வழங்கும் நிறுவனமான இண்டிகோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம். இந்தச் சலுகை பற்றிய முழு விவரத்தைப் பார்ப்போம்.
IndiGo Getaway Sale
2025 ஆம் ஆண்டில் நீங்களும் எங்காவது விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ பயணிகளுக்கு சிறப்பான சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
IndiGo Airlines
இண்டிகோ வழங்கும் பிரத்யேக 'கெட்வே சேல்' (Getaway Sale) மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. இந்த சலுகை விற்பனை டிசம்பர் 25, 2024 வரை மட்டுமே கிடைக்கும்.
Indigo Flight Ticket Offer
2025 ஜனவரி 23 முதல் ஏப்ரல் 30 வரை எங்கு வேண்டுமானாலும் சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம். இந்தத் தேதிகளுக்குள் பயணம் செய்ய டிசம்பர் 25 க்குள் இண்டிகோ (IndiGo) விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் டிக்கெட் விலை மலிவாக இருக்கும்.
IndiGo Flight Fares
உள்நாட்டு வழித்தடங்களுக்கான டிக்கெட் விலை 1,199 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் வெளிநாடு செல்வதற்கான சர்வதேச விமானக் கட்டணம் 4,499 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மலிவான டிக்கெட்டுகள் மட்டுமின்றி, வேறு சில சேவைகளைப் பெற 15% கூடுதல் தள்ளுபடியையும் இண்டிகோ வழங்குகிறது.
IndiGo Luggage Offer
கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதற்கான முன்பணம் (15 கிலோ, 20 கிலோ, 30 கிலோ), இருக்கை தேர்வுக்கான கட்டணம், அவசரகாலத்தில் பெரிய இருக்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான கட்டணம் (XL) ஆகியவற்றில் கூடுதல் சலுகை கிடைக்கும். இந்த வசதிகளுக்கான கட்டணம் உள்நாட்டு விமானங்களில் ரூ.599 முதல் கிடைக்கும். சர்வதேச விமானங்களில் இந்தக் கட்டணம் ரூ.699 முதல் தொடங்குகிறது.
IndiGo Federal Bank Offer
ஃபெடரல் வங்கியுடன் இணைந்து இண்டிகோ மற்றொரு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இண்டிகோ விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் உள்நாட்டு வழித்தடங்களில் 15%, சர்வதேச வழித்தடங்களில் 10% தள்ளுபடி பெறலாம். ஆனால் இதற்கு நீங்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை முன்பதிவு செய்ய, நீங்கள் இண்டிகோவின் இணையதளம் அல்லது மொபைல் செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.