IEC 3.0: இனி வருமான வரி தாக்கல் ரொம்ப ஈசி! ரீஃபண்ட் கூட சீக்கிரம் கிடைக்கும்!
வரி செலுத்துவோர் இனி வருமான வரி தாக்கல் செய்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்ளத் தேவையில்லை. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இ-ஃபைலிங் ஐடிஆர் போர்ட்டலில் பெரிய மாற்றம் வரவுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் விரைவான செயல்முறையுடன் IEC 3.0 என்ற புதிய திட்டம் வரவுள்ளது.
ITR e-filing portal
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இ-ஃபைலிங் ITR போர்ட்டலில் பெரிய மாற்றம் வரவுள்ளது. புதிய தளம் வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும். புதிய ITR இ-ஃபைலிங் போர்ட்டல் IEC 3.0 விரைவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது. வருமான வரித்துறை சுற்றறிக்கை ஒன்றின்படி, தற்போதுள்ள ஒருங்கிணைந்த IEC 2.0 திட்டத்துக்குப் பதிலாக IEC 3.0 என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
IEC Project
IEC திட்டம் என்றால் என்ன?
IEC திட்டம் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய தளத்தை வழங்குகிறது. இது வரி செலுத்துவோர் மின்னணு முறையில் தங்கள் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய உதவும். வழக்கமான படிவங்களுடன் பல சேவைகளையும் பயன்படுத்த முடியும். IEC திட்டத்தின் முக்கிய பகுதி மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம் (CPC) ஆகும். இது ITBA உதவியுடன் ITR தாக்கல் நடைமுறையை நிர்வகிக்க பயன்படுகிறது. இது தவிர, IEC திட்டத்தில் உள்ள அலுவலகப் பயன்பாட்டுக்கான வசதிகள் மூலம் வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் தரவுகளை அதிகாரிகள் சரிபார்க்க முடியும்.
IEC 3.0 vs IEC 2.0
IEC 3.0 திட்டத்தின் குறிக்கோள், IEC 2.0 வழங்கும் சேவைகளைத் தொடர்வது மட்டுமல்ல. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறையில் தேவையான முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும். வரி செலுத்துவோர் ரீஃபண்ட் தொகையை விரைவாகத் திரும்பப்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய அமைப்பு வர இருக்கிறது. இது தவிர, IEC 2.0 திட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளும் களையப்பட்டிருக்கும்.
IEC 3.0 Benefits
IEC 2.0 இலிருந்து IEC 3.0 க்கு மாறுவதன் மூலம் வரி செலுத்துவோருக்கு மிகவும் எளிய நடைமுறையைப் பின்பற்றலாம். IEC 3.0 திட்டத்தில் கடுமையான தரவு தர பரிசோதனை முறைகள் செயல்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு, IEC 2.0 திட்டத்தில் வரி செலுத்துவோர் ITR படிவங்களைப் பதிவிறக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். 26AS படிவத்தைப் பதிவிறக்குவது, சர்வர் தொடர்பான குறைபாடுகள், சலான் செலுத்துதல் ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் IEC 3.0 திட்டத்தில் இருக்காது என நம்பலாம். IEC 3.0 திட்டம் எதிர்வரும் ஆண்டுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லபடுகிறது.
Taxpayers
பண்டிகைக் கால சலுகைகளின்போது ஆயிரக்கணக்கான நுகர்வோர் பயன்படுத்தும் இ-காமர்ஸ் தளங்கள் செயலிழப்பது இல்லை. ஆனால், வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் தொடர்ந்து சிக்கல்கள் வருகின்றன. சரியான நேரத்தில் வருமான வரி இணையதளத்தை மேம்படுத்தினால், வரி செலுத்துவோரின் சிரமங்களைத் தடுக்கலாம்.