MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Income Tax Rules: மாத சம்பளதாரர்களுக்கு குட்நியூஸ்.. ஏப்ரல் 1 முதல் வரும் அதிரடி மாற்றங்கள்!

Income Tax Rules: மாத சம்பளதாரர்களுக்கு குட்நியூஸ்.. ஏப்ரல் 1 முதல் வரும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வருமான வரி விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. மாத சம்பளதாரர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 21 2026, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 புதிய வருமான வரி விதிமுறைகள்
Image Credit : Gemini

புதிய வருமான வரி விதிமுறைகள்

நிதித்துறையில் பல பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் புதிய வருமான வரி விதிமுறைகள், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பழைய சட்டத்திற்குப் பதிலாக, 'வருமான வரிச் சட்டம் 2025' என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதால், அதற்கு ஏற்றவாறு வரி அமைப்பை மாற்றுவதே இதன் முக்கிய நோக்கம். ஏப்ரல் 1 முதல் என்னென்ன 10 முக்கிய மாற்றங்கள் வருகின்றன என்று பார்க்கலாம்.

24
1. வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் வரி
Image Credit : Gemini

1. வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் வரி

இந்தியாவில் கட்டிடமோ, அலுவலகமோ இல்லாத வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களும் இனி வரி செலுத்த வேண்டும். ஒரு வெளிநாட்டு ஆப் அல்லது வெப்சைட், இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினாலோ, அல்லது 3 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் பயனர்கள் இருந்தாலோ, அந்த நிறுவனம் இந்திய வரி வரம்புக்குள் வரும்.

2. வரித்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் வருமானத்தை சரியாகக் கணக்கிட முடியாத சூழ்நிலையில், அதை மதிப்பிடுவதற்கு வரித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக நிர்ணயிக்க அதிகாரிகளுக்கு முடியும்.

3. பங்குச் சந்தையில் கடும் கண்காணிப்பு

பங்கு சந்தையில் கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பங்குச் சந்தை அமைப்புகள் (Stock Exchanges) அனைத்துப் பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் 7 ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது வரி ஏய்ப்பைத் தடுக்க உதவும்.

Related Articles

Related image1
60 ஆண்டுகளுக்குப் பிறகு.. வருமான வரி விதிகள் மாறுது.. வரி செலுத்துவோருக்கு முக்கிய அப்டேட்
34
3. பங்குச் சந்தையில் கடும் கண்காணிப்பு
Image Credit : Gemini

3. பங்குச் சந்தையில் கடும் கண்காணிப்பு

பங்கு சந்தையில் கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பங்குச் சந்தை அமைப்புகள் (Stock Exchanges) அனைத்துப் பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் 7 ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது வரி ஏய்ப்பைத் தடுக்க உதவும்.

4. வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு புதிய ஃபார்முலா

இந்தியாவில் உள்ள சொத்துக்களுடன் தொடர்புடைய பங்குகளை வெளிநாட்டில் வைத்து கைமாற்றினால், அதில் இருந்து இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய வரியைக் கணக்கிட ஒரு புதிய ஃபார்முலா கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளைக் குறைக்க உதவும்.

5. பங்குகளின் மதிப்பைக் கணக்கிடுதல்

பங்குகளின் சந்தை மதிப்பைக் கணக்கிடுவதற்குத் தெளிவான விதிகள் வருகின்றன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளுக்கு சந்தை விலையும், மற்ற நிறுவனங்களுக்கு மெர்ச்சன்ட் பேங்கர்களின் மதிப்பீடும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

6. சம்பளம் வாங்குவோர் கவனிக்க வேண்டியவை

ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கும் சலுகைகளுக்கான வரியைக் கணக்கிடும் முறையில் மாற்றம் வருகிறது:

தங்குமிடம்: நிறுவனம் வழங்கும் வீட்டின் மதிப்பைக் கணக்கிடும்போது, அந்த நகரத்தின் மக்கள் தொகையும் கருத்தில் கொள்ளப்படும்.

உணவு: ஒரு வேளைக்கு 200 ரூபாய் வரையிலான உணவுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும்.

பரிசு: ஒரு வருடத்தில் 15,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுகள் கிடைத்தால், அதற்கு வரி செலுத்த வேண்டும்.

44
7. நிறுவனம் வழங்கும் கடன்கள்
Image Credit : our own

7. நிறுவனம் வழங்கும் கடன்கள்

ஊழியர்களுக்கு நிறுவனம் குறைந்த வட்டிக்கோ அல்லது வட்டி இல்லாமலோ கடன் கொடுத்தால், அது ஊழியரின் வருமானமாகக் கருதப்படும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தச் சலுகைக்கான வரி நிர்ணயிக்கப்படும்.

8. ஸ்டார்ட்-அப் ஊழியர்களுக்கு...

நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் பங்குகளின் (ESOPs) மதிப்பைக் கணக்கிடுவதில் கூடுதல் தெளிவு கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஸ்டார்ட்-அப் நிறுவன ஊழியர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

9. வரி விலக்கு இல்லாத செலவுகளுக்கு புதிய விதி

வரி இல்லாத வருமானத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படும் செலவுகளைக் கணக்கிட ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரடிச் செலவுகளுடன், மொத்த முதலீட்டில் ஒரு சதவீதமும் இதற்காகக் கணக்கிடப்படும்.

10. பாண்டுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடு

ஜீரோ கூப்பன் பாண்டுகளை (Zero Coupon Bonds) வெளியிடுவதற்குப் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பாண்டுகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரை முதிர்வுக் காலம் கொண்டிருக்க வேண்டும். மேலும், இவற்றுக்கு 'இன்வெஸ்ட்மென்ட் கிரேடு' ரேட்டிங் கட்டாயம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வருமான வரி விதிகள்
வருமான வரி
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.! நகையா? கோல்டு பிஸ்கட்டா? இந்த நேரத்தில் எது வாங்குவது சிறந்தது?
Recommended image2
FASTag கட்டண உயர்வு.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.! மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.!
Recommended image3
Gold Rate: பதட்டமே வேண்டாம்! அடுத்த 9 மாதங்களுக்கு தங்கம் விலையில் மாற்றமில்லை! அடித்து சொல்லும் நிபுணர்கள்!
Related Stories
Recommended image1
60 ஆண்டுகளுக்குப் பிறகு.. வருமான வரி விதிகள் மாறுது.. வரி செலுத்துவோருக்கு முக்கிய அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved