ஒரே நாளில் சரிந்த தங்க விலை.! இன்று ஒரு சவரன் விலை என்ன தெரியுமா.?
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையும் தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. வல்லுநர்கள் விலை மேலும் உயரும் எனக் கணித்துள்ளனர், இது நடுத்தர மக்களுக்குக் கவலையளிக்கிறது. தங்கம் விலை எதிர்காலத்தில் எவ்வாறு மாறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Gold Rate in tamilandu
தங்கத்தின் மீதான முதலீடு
தங்கம் என்றாலே பெண்களை கவர்ந்திழுக்க கூடிய ஆபரணம் ஆகும். அந்த வகையில் மற்ற நாடுகளை விட இந்திய பெண்களே அதிக அளவில் தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் கொண்டுள்ளனர். தங்கத்தின் மீதான ஆர்வம் எப்போதும் குறைந்ததில்லை. புது புது டிசைனில் தங்கத்தை வாங்கி அணிய பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
மேலும் திருமண நிகழ்வுகளில் தங்கத்தின் பங்கு இந்தியாவில் முக்கிய இடம் பிடிக்கும், திருமண பெண் முதல் கலந்து கொண்டிருக்கும் விருந்தினர்கள் வரை தங்கத்தை வித விதமாக அணிந்திருப்பார்கள்.
Gold Investment
அவரச தேவைக்கு உதவும் தங்கம்
அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்ய இந்திய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். மேலும் தங்கம் என்பது அவரச தேவைக்கு பயன்படும் அட்ஷய பாத்திரமாக இருப்பதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. தங்கம் இருந்தால் மருத்துவம், கல்வி போன்ற அவரச தேவைகளுக்கு நகைகளை விற்றோ, அடமானம் வைத்தோ உடனடியாக பணத்தை பெற முடியும். இதுவே வீடு, கார், நிலம் போன்றவையாக இருந்தால் உடனடியாக பணம் பெறுவது நடக்காத காரியம். எனவே எந்த நேரத்திலும் ஆபத்திற்கு உதவும் நண்பனாக தங்கம் உள்ளது.
Gold rate in chennai
உச்சத்தை தொடப்போகும் தங்கம் விலை
இந்த நிலையில் தான் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டது. ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலையானது சரிந்தது. ஒரு சவரனுக்கு 4100 ரூபாய் வரை குறைந்தது.
இதனால் தங்கத்தை வாங்க மக்கள் நகைக்கடைகளில் கூடினர். கடன் வாங்கியோ பழைய நகைகளை அடகு வைத்தோ நகைகளை வாங்கி குவித்தனர். இதற்கு காரணம் தற்போது குறைந்த தங்கத்தின் விலை எந்த நேரத்திலும் திடீரென உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையும் அடுத்த ஒரு மாதமாக நாள் தோறும் ஏறி இறங்கி வருகிறது.
1 savaran gold rate
ஏறி இறங்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது வருகிற நாட்கள் மீண்டும் உச்சத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சவரன் 1 லட்சம் முதல் 2 லட்சம் ஆக உயரும் எனவும் இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை நகைக்கடைகளில் மட்டுமே பார்க்கும் நிலை வெகு விரைவில் உருவாகும் என கூறியுள்ளனர். இந் த நிலையில் தான் தங்கத்தின் விலையானது நேற்று மீண்டும் அதிகரித்து ஷாக் கொடுத்தது. அதன் படி ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்திருந்தது.
Gold rate today 1 gram
இன்றைய தங்கம் விலை என்ன.?
நேற்று ஒரு கிராம் 7ஆயிரத்து 140 ரூபாய்க்கும், சவரன் 57ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 7115 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் படி ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 56, 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.