இன்றும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.! மீண்டும் அதிகரிப்பு- ஒரு சவரன் இவ்வளவா.?
2024ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு 20,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வல்லுநர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளனர். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் மக்களிடையே முதலீட்டு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதனிடையே இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது.
gold rate
தங்கத்தின் மீதான ஆர்வம்
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் எப்போதும் குறைந்ததில்லை. திருமணங்கள், விஷேச நாட்களில் தங்கத்தின் பங்கு முக்கியம் வகிக்கிறது. இதன் படி தங்கத்தை அதிகளவு வாங்கி குவிக்கும் நாடுகளில் இந்திய முதலிடத்தில் உள்ளது. இதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. தங்கத்தில் முதலீடு எப்போதும் நஷ்டத்தை ஏற்படுத்தியது இல்லை.
gold rate
ஒரே ஆண்டில் 20ஆயிரம் உயர்வு
அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி ஒரு கிராம் 5,910க்கும், ஒரு சவரன் ரூ.47,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே கடந்த ஒரே ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 20ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே வரும் ஆண்டுகளில் தங்கத்தின் விலையானது மிகப்பெரிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gold rate
உச்சத்தை தொடும் தங்கம் விலை
ஒரு சவரன் ஒரு லட்சத்தைக்கூட இந்த ஆண்டு இறுதியில் எட்டிவிடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனாலே தங்கத்தை வாங்க நாள் தோறும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதிவருகிறது. தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் எதிர்கால முதலீட்டிற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் தங்கத்தை மக்கள் வாங்குகிறார்கள். மேலும் அவசர கால தேவைவகளுக்கு தங்கம் ஒரு சிறந்த உதவியாக இருக்கிறது.
gold rate
ஜனவரி 1 தங்கம் விலை
வருட இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி தங்கத்தின் விலை குறைந்து கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,110க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,880க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2025ஆம் ஆண்டின் தொடக்கமான நேற்று ஜனவரி 1ஆம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்தது. அதன் படி நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.57,200 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
gold rate today
இன்றைய தங்கம் விலை
இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,180 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 57,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 2025ஆம் ஆண்டின் தொடக்கமான நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.