மளிகைப் பொருட்கள் முதல் சோப் வரை.. எல்லாமே விலை அதிகரிக்கப்போகுது!
புத்தாண்டு முதல் நாளான ஜனவரி 1, 2025 முதல் பல விஷயங்களின் விதிமுறைகள் மாற உள்ளன. இந்த நாளிலிருந்து சில பொருட்கள் மலிவாகவும், சில பொருட்கள் விலை உயர்வும் காணும். இந்த மாற்றங்கள் பொதுமக்களின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.
Price Hike List
ஜனவரி 1 முதல் ஏடிஎம் (ATM) மூலம் பணம் எடுப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வங்கி மற்றும் ஏடிஎம் நிர்வாகிகள் கட்டண உயர்வை முன்மொழிந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் அதிகரிக்கலாம். எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியுடன் கட்டணம் பற்றி விசாரித்து தெரிந்து கொள்வது அவசியம்.
Mobile Recharge Price
டிராய்-யின் (TRAI) உத்தரவின்படி, மொபைல் ரீசார்ஜ் விலை குறைய உள்ளது. மேலும், மொபைல் ரீசார்ஜ் வரி குறைக்கப்படும். இதனால் இந்தியாவில் உள்ள பல கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.
Parle-G Biscuit Price
வருகின்ற 2025 ஜனவரி 1 முதல் பிரபலமான பார்லே-ஜி பிஸ்கட்டின் விலை உயர உள்ளது. உற்பத்தி செலவைக் கட்டுப்படுத்த பிஸ்கட்டின் எடையைக் குறைத்து விலையை உயர்த்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Petrol Diesel Price
2025 புத்தாண்டு முதல் நாளிலிருந்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர உள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தால் விலையில் மாற்றம் ஏற்படும்.
Soap
சுமார் 7 முதல் 8 சதவீதம் வரை சோப்பு விலை உயர்வு ஏற்பட போகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் குளியல் சோப்பின் விலை உயரும் எனத் தெரிகிறது.
Beggar
ஜனவரி 1 முதல் பிச்சை கொடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தூர் நகரில் இந்த புதிய விதி 2025 ஜனவரி 1 அன்று இது அமலுக்கு வருகிறது.
FMCG
பிஸ்கட் முதல் எண்ணெய், சோப்பு வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என கூறப்படுகிறது. ஜனவரி 1 முதல் FMCG பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்