PF கணக்கில் இருந்து பணம் எடுக்கப் போறீங்களா? 30% வரியை மிச்சப்படுத்துவது எப்படி?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியத் திட்டம் முதிர்ச்சியடைவதற்கு முன்பே தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து ஓரளவு அல்லது முழுமையாகப் பணத்தை எடுக்கலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களுக்கு பல்வேறு தேவைகளுக்கு பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு நிலையான ஓய்வூதியம் கிடைக்கச் செய்வதுதான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால், ஓய்வூதியத் திட்டம் முதிர்ச்சியடைவதற்கு முன்பே தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து ஓரளவு அல்லது முழுமையாகப் பணத்தை எடுக்கலாம்.
சமீபத்தில் EPFO பணம் திரும்பப் பெறும் விதிகளை மாற்றியுள்ளது. அதன் மூலம் தொழிலாளர்களின் வரிச்சுமை அதிகரித்துள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பு என்ன புதிய விதியை அமல்படுத்தியுள்ளது என்பதை தெரிந்துகொள்வோம். இதனால் ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும், அதை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.
சாதாரண சூழ்நிலையில், பணி ஓய்வுக்கு முன் வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது. ஆனால் சில சூழ்நிலைகளில் PF பணத்தில் ஓரளவு ஒரு பகுதியை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. மருத்துவத் தேவை, உயர்கல்வி, வீடு வாங்குவது அல்லது கட்டுவது போன்றவை காரணங்களுக்காக பணத்தை எடுக்கலாம்
EPFO fixes 8.25% interest rate on employees' provident fund for 2023-24
ஒரு ஊழியர் வேலை இழந்தால், அவர் ஒரு மாதத்திற்குப் பிறகு 75% EPF பணத்தை எடுக்கலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு 100% பணத்தையும் பெறலாம்! ஆனால் இதற்கு அந்த ஊழியர் தான் இப்போது வேலை ஏதும் பார்க்கவில்லை என்று உறுதி அளிக்க வேண்டும்.
PF Deducted From Salary By Employer, Not Deposited To EPFO
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் PF பணத்தின் ஒரு பகுதியையோ முழுமையாகவோ பெறுவதற்கு 30% வரி செலுத்த வேண்டியிருக்கலாம். PF கணக்கு தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியிருந்தால் இந்த 5 வரியைத் தவிர்க்கலாம். ஆனால் பெறும் தொகை ரூ.50,000க்கு குறைவாக இருந்தால், 5 ஆண்டுகள் ஆகாவிட்டாலும் இந்த வரி செலுத்த வேண்டியதில்லை.
Diwali Bonanza! EPFO In Process Of Crediting 8.15% Interest To Employees
கணக்கைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குள் PF கணக்கில் இருந்து திரும்பப் பெறும் தொகை 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், 10% டிடிஎஸ் செலுத்த வேண்டும். ஒருவேளை பான் கார்டு இல்லை என்றால் இந்த வரி 30% ஆகிவிடும்.