- Home
- Business
- Extra Income: எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்படி சேமிக்கலாம் தெரியுமா.? இப்படி செய்தால் நீங்களும் கோடீஸ்வரன்.!
Extra Income: எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்படி சேமிக்கலாம் தெரியுமா.? இப்படி செய்தால் நீங்களும் கோடீஸ்வரன்.!
கூடுதல் வருமானத்தை சேமித்து முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் செல்வந்தராக மாறலாம். சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதும், செல்வத்தை உருவாக்குவது, பாதுகாப்பது மற்றும் வளர்ப்பது ஆகியவையும் முக்கியம்.

கூடுதல் வருமானம் எனும் காக்கும் சொத்து!
பலரும் தங்கள் பணியை தாண்டி ஏதேனும் ஒரு வேலை செய்து எச்ஸ்டா வருமான பர்க்க தொடங்கியுள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் 'எக்ஸ்ட்ரா' பணத்தை திட்டமிட்டு சேமித்தால் நீங்கள் ஆண்டு முடிவில் லட்சாதிபதியாகவும், சில ஆண்டுகளில் கோடீஸ்வரன் ஆகவும் மாறுவீர்கள். ஆண்களோ பெண்களோ சரி கூடுதலாக 500 ரூபாய் கிடைத்தல் கூட அதனை ட்ரீட் என கொண்டாடி தீர்த்து விடுகிறோம். ஆனால் அதனை சேமித்து முதலீடு செய்தால் ஆண்டின் முடிவில் அது மிகப்பெரிய தொகையை பரிசாக தரும்.
சரியான வழி லாபத்தை கொடுக்கும்!
ஒரு சிலர் கூடுதலாக கிடைக்கும் பணத்தை தெரியாத தவறான திட்டங்களில் இன்வெஸ்ட் செய்து ஏமாறும் நிலையும் ஏற்படுகிறது. நம்முடைய தேவைகளும் சேமிப்பும் முதலீடுகளுமே நம்மை செல்வந்தர்கள் ஆக்கும் என்பதைவிட, நாம் எதில் எப்போது முதலீடு செய்கிறோம் என்பதே நம்மை பொருளாதார ரீதியாக உயர்த்தும் வழியாக பார்க்கப்படுகிறது.
செல்வத்தை தரும் விதிகள்!
செல்வத்தை உருவாக்குவதற்கு சில அடைப்படை விதிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதில், செல்வத்தை உருவாக்குவது (Wealth Creation), செல்வத்தை பாதுகாப்பது (Wealth Protection),செல்வத்தை வளர்ப்பது (Wealth Growth) ஆகியவை முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் கொடிக்கட்டி பறக்கும் பலர் கிடைக்கும் கூடுதல் வருமானத்தில் இப்படி திட்டமிட்டு முதலீடு செய்தவர்களே என்பதை நாம் மறுக்க முடியாது.
செல்வத்தை உருவாக்குவது (Wealth Creation)
நமது வேலையில் கிடைக்கும் சம்பளம் செலவுக்கே சரியாக இருக்கம் பட்சத்தில் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை திட்டமிட்டு செலவிட்டால் அத நமக்கு செல்வத்தை உருவாக்கும். அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை, சம்பள உயர்வு, வியாபார வளர்ச்சி ஆகியவைகளுடன், பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகள் கூட சேரும் போது, செல்வம் வளரத் தொடங்கும், பொருளாதாரம் மேம்படும்.
செல்வத்தை பாதுகாப்பது (Wealth Protection)
சம்பளம் கிடைப்பது மாதமாதம் நடந்தாலும் அதனை பாதுகாக்க காப்பீடு செய்வது மிகவும் அவசியம். தனிநபர், குடும்பம் மற்றும் வாகன காப்பீடுகள் – ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, வீட்டு இன்ஷூரன்ஸ் ஆகியவை நம்மை திடீர் நிதி சிக்கல்களில் இருந்து காப்பாற்றும் வழிகள் என்றால் அது மிகையல்ல.
செல்வத்தை வளர்ப்பது (Wealth Growth)
சில முதலீடுகள் நம்மையும் நம் பொருளாதாரத்தையும் அப்படியே உச்சம் தொட வைக்கும். பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள், கடன் பத்திரம் சார்ந்த முதலீடுகள், ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி போன்றவை வாங்குதல் நமது செல்வத்தை வளர்க்கும் யுத்திகள்.
அஸெட் அலோகேஷன் முக்கியம்
செல்வத்தைச் சேமிக்கவும், வளர்க்கவும் 'அஸெட் அலோகேஷன்' முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். உங்கள் வருமானத்தில் இருந்து 3 முதல் 6 மாத தேவைகளுக்கான பணத்தை தனியாக வைத்துக் கொண்டு மீதம் இருக்கும் பணத்தை முதலீடு செய்வதே சிறந்த வழியாகும்.
செல்வத்தை பராமரிப்பது (Maintaining Wealth)
செல்வத்தை பாதுகாப்பது என்பது ஈசியான விஷயம் கிடையாது. செல்வத்தை உண்டாக்கி, பாதுகாத்து வளர்த்த பிறகு, அதை பராமரிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். பங்கு கணக்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், சொத்து வரி, வீட்டு பராமரிப்பு, டீமேட் கணக்கு ஆகியவற்றை மாதாமாதம் பரிசீலிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். செல்வம் என்பது ஒரு நாள் பயணமல்ல, அது ஒரு நீண்டகால பயணமாகும் நிதியாக நன்கு திட்டமிட்டு பயணிக்கையில் மட்டுமே அந்த பயணம் பயனளிக்கிறது என்கின்றனர் சந்தை நிபணர்கள்.