Become Crorepati : மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் 1 கோடி சேமிக்கலாம்: எப்படி தெரியுமா?
மாதந்தோறும் எவ்வளவு தான் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலும், சேமிக்க முடியவில்லை என்ற கவலை பலருக்கும் உண்டு. அதே நேரத்தில் திட்டமிட்டு, பண விஷயத்தில் கவனமாக இருந்தால் நிச்சயம் 1 கோடி வரை பணம் சேமிக்கலாம்.
Become Crorepati
பல வளர்ந்து வரும் முதலீட்டாளர்களும் சரி, பொதுமக்கள் பலரும் சரி, அனைவரும் 1 கோடி ரூபாய் சொத்துக்களை உருவாக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் மாத வருமானம் குறைவாக உள்ளது. சிறிய மாதச் சம்பளத்துடன் 1 கோடி சம்பாதிப்பது என்பது அடைய முடியாத ஒன்று என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான ஒன்றாகும்.
Monthly Salary
தொழில்முனைவோரும், செபியின் பதிவுசெய்த முதலீட்டு ஆலோசகருமான கௌரவ் கோயல் இதுபற்றி கூறியதாவது, ரூ. 25,000 மாத சம்பளத்துடன் ரூ.1 கோடி இலக்கை அடைய அர்ப்பணிப்பு தேவை. இந்த இலக்கை அடைவதற்கான சிறந்த வழி, முறையான முதலீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தி 5 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் சேமிப்பை அதிகப்படுத்துவதாகும்.
Mutual Funds
இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை சில அடிப்படை ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுக்கலாம். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மீது முதலீடு செய்யும் போது, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் நல்ல லாபம் தரும். ஈக்விட்டி முதலீடுகளில் எப்போதும் உள்ளார்ந்த ஆபத்து உள்ளது மற்றும் எந்த முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பும் மனதில் கொள்ள வேண்டும்.
SIP
கீழேயுள்ள அட்டவணையில் வெவ்வேறு அனுமான மாதாந்திர சேமிப்புக் பிளான்களின் கீழ் ரூ. 1 கோடி இலக்கை அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை பார்க்கலாம். கன்சர்வேடிவ் மதிப்பீடுகளால் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 12 சதவீதம் என்று கருதப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் சென்செக்ஸின் சிஏஜிஆர் 15.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Equity Mutual Fund
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா 12 சதவிகிதம் பெயரளவு வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே CAGR 12 சதவீதம் என்று கருதப்படுகிறது. மேற்கண்ட முதலீடு மூலம் நீங்கள் மாதம் ரூ.25 ஆயிரமோ அல்லது அதற்கு மேல் சம்பளம் பெறுபவராக இருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!