கிரெடிட் கார்டு மூலம் UPI பரிவர்த்தனை செய்வது எப்படி?
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டு மூலமாக UPI பரிவர்த்தனை செய்ய முடியும். அது எப்படி என்று இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Credit Card UPI payments
நாட்டில் உள்ள மக்கள் பணப் பரிமாற்றம் செய்வதற்காக UPIக்கு அதிகளவில் பயன்படுத்துகின்றனர். UPI பரிவர்த்தனைகள் 2024 டிசம்பரில் 16.73 பில்லியனை எட்டியதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) கூறியது. இது நவம்பர் எண்ணிக்கையான 15.48 பில்லியனை விட 8 சதவீதம் அதிகமாகும்.
UPI payments using Credit Card
UPI பிரபலமடைந்து வருவதால், கிரெடிட் கார்டு பயனர்களும் இப்போது ஷாப்பிங்கிற்கு UPI பேமெண்ட்டை தேர்வு செய்கிறார்கள். பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது எளிதானது, எந்தச் சிக்கலும் இல்லாதது.
UPI transactions
நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் UPI பரிவர்த்தனை செய்ய விரும்பினால், முதலில் BHIM செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதில் உங்கள் கிரெடிட் கார்டை இணைக்கவும். கார்டில் உள்ள கடைசி நான்கு இலக்கங்கள், காலாவதி தேதி, CVV எண் ஆகியவ விவரங்களைக் கவனமாக டைப் செய்யுங்கள். இதன் மூலம் கிரெடிட் கார்டை UPI பேமெண்ட் வழிமுறையாக இணைத்துக்கொள்ளலாம்.
Credit Card payments
உங்கள் கிரெடிட் கார்டை இணைத்த பிறகு, அதற்கான UPI ஐடியை உருவாக்கவும். UPI ஐடி என்பது ஒரு தனித்துவமான எண். இது எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள் கொண்டதாக இருக்கும். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஐடி, UPI மூலம் பணம் செலுத்தவும் பெறவும் உதவும்.
UPI apps
பணம் செலுத்துவது எப்படி?
கிரெடிட் கார்டு மூலம் UPI பணம் செலுத்த, QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். அல்லது மொபைல் எண்ணைக் குறிப்பிட்டும் பணம் செலுத்தலாம். UPI பரிவர்த்தனைகளில் உள்ள எல்லா வசதியும் கிரெடிட் கார்டு UPI பரிவர்த்தனையிலும் கிடைக்கும்.