MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூபே கிரெடிட் கார்டை கூகுள் பேயில் இணைப்பது எப்படி?

ரூபே கிரெடிட் கார்டை கூகுள் பேயில் இணைப்பது எப்படி?

கூகுள் பே (Google Pay) செயலியில் ரூபே கிரெடிட் கார்டை (RuPay Credit Card) இணைப்பது சுலபம். உங்கள் கார்டு விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் சரிபார்த்து, UPI பின்னை உருவாக்கினால் போதும்.

1 Min read
Author : SG Balan
Published : Apr 14 2025, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பொதுவாக, கூகுள் பே டெபிட் கார்டுகளுடன் மட்டும் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உங்களிடம் ரூபே கிரெடிட் கார்டு (RuPay Credit Card) இருந்தால், கிரெடிட் கார்டு மூலமாகவும் யுபிஐ கட்டணத்தைச் செலுத்தலாம்.

26
Google Pay Logo

Google Pay Logo

இப்போது பல வங்கிகளில் ரூபே கிரெடிட் கார்டுகள் (Credit Cards) கிடைக்கின்றன. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பிஎன்பி, ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் மட்டுமின்றி, பல பிராந்திய மற்றும் கூட்டுறவு வங்கிகளும் வழங்குகின்றன.

36

UPI பரிவர்த்தனைகளுக்கு உங்கள் RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்த விரும்பினால், முதலில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Google Pay இல் பதிவு செய்துகொள்ளுங்கள். தொடர்ந்து கார்டை இணைப்பதற்கு பின்வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

46

Google Pay செயலியைத் திறந்து, புரொஃபைப் புகைப்படத்தின் மீது கிளிக் செய்து Payment Methods பகுதிக்குச் சென்று, Add RuPay Credit Card என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து உங்கள் கார்டு விவரங்களை டைப் செய்யவும். (CVV , எண், காலாவதி தேதி)

56

தேவையான கார்டு விவரங்களை டைப் செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ அதற்குரிய இடத்தில் நிரப்பி, சமர்ப்பிக்கவும். இப்போது, UPI பரிவர்த்தனைகளுக்கான PIN ஐ உருவாக்கலாம். அதனை இரண்டு முறை சரியாக டைப் செய்து உறுதிபடுத்தவும்.

66

இதன் மூலம் ​​உங்கள் RuPay டெபிட் கிரெடிட் கார்டு கூகுள் பேயில் இணைக்கப்பட்டுவிடும். இனி, கூகுள் பே செயலியில் QR குறியீடுகள், UPI ஐடிகள் மூலம் UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் இதனைப் பயன்படுத்தலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இணையவழி செலுத்துகை
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
கடன் அட்டை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் விசித்திர ரயில் நிலையம்.. பெயரே கிடையாது.. ஆனால் ரயில் நிற்கும்.. டிக்கெட் கொடுப்பாங்க.. எப்படி?
Recommended image2
2000-ல் ரூ.1 லட்சம் போட்டிருந்தா இன்று ரூ.47 லட்சம்.. இந்த ஒரு பங்கு பலரை கோடீஸ்வரராக்கியது
Recommended image3
EMI கட்ட தேவையில்லை.. EMI இல்லாத கடன் திட்டம் பற்றி தெரியுமா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved