MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • செல்போன் தொலைந்து போச்சா.. கூகுள் பே, போன் பே-வை பிளாக் செய்வது எப்படி தெரியுமா?

செல்போன் தொலைந்து போச்சா.. கூகுள் பே, போன் பே-வை பிளாக் செய்வது எப்படி தெரியுமா?

உங்கள் செல்போன் தொலைந்துவிட்டால் அதில் உள்ள யுபிஐ ஐடியை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்ற வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 26 2024, 06:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mobile Phone

Mobile Phone

நமது கையில் செல்போன் இருந்தால் உலகத்தையே கையில் வைத்திருப்பது போன்ற நிலைமை வந்துவிட்டது. முன்பெல்லாம் வங்கியில் கால் கடுக்க நின்று செல்லான் எழுதி கொடுத்து பணத்தை வங்கி கணக்கில் அனுப்பிய காலம் மாறிப்போய் தற்போது வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. யுபிஐ வசதியால் வங்கிக்கு செல்லாம் எந்த நேரத்திலும்  யாருக்கு வேண்டுமானாலும் எந்த சிரமமின்றி பணம் அனுப்பி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
UPI Details

UPI Details

ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் அக்கோவுண்ட் இல்லாமலே வேறும் செல்போன் எண்ணை வைத்தே அடுத்த நொடியே பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பி விட முடியும். அதேபோன்று ரீசார்ஜ், மின் கட்டணம் ஆகிவற்றை செலுத்தலாம். தற்போது கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனை வழங்கும் செயலிகள் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது.

35
UPI Temporarily Block

UPI Temporarily Block

இந்த சூழலில் நம்முடைய மொபைல் போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போய்விட்டாலோ அல்லது திருடப்பாட்டாலோ நம்முடைய முக்கியமான யுபிஐ விவரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பெரிய ஆபத்து வரக்கூடும். திருடப்பட்ட மொபைல் போன்களிலிருந்து யுபிஐ விவரங்களை பயன்படுத்தி பலரின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யப்படுகிறது. ஆகவே உங்கள் மொபைல் போன் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டால் நாம் முக்கியமாக செய்யவேண்டியது யுபிஐ ஐடியை பிளாக் செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

45
UPI Deactivate

UPI Deactivate

யுபிஐ பின்னை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்

வங்கி கணக்கு சேவைகள் முடக்கப்பட்டால் அடுத்து திருடிய நபர்கள் உங்களுடைய யுபிஐ செயலிகளுக்கு சென்று பணம் திருட வாய்ப்பு உள்ளது. எனவே மொபைல் போன் தொலைந்த உடன் உங்களுடைய யுபிஐ கணக்கை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தடுக்க முடியும். 

55
Google Pay

Google Pay

கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகள் கணக்கை முடக்க வேண்டும்

உங்கள் மொபைல் போனில் கூகுள் பே வைத்திருந்தால் 1-800-419-0157 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை கொடுத்து யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம். போன் பே-யில் 0806-8727-374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பேடிஎம் யூசர் என்றால் 0120-04456-456 -என்ற எண்ணை அழைக்க வேண்டும். சேவை அதிகாரிகளிடம் தேவையான தகவல்களை உறுதி செய்த பிறகு உடனடியாக யுபிஐ ஐடியை பிளாக் செய்து விடுவார்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Schemes: ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள்! யாருக்கெல்லாம் என்னென்ன நன்மைகள்?
Recommended image2
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
DMart Shopping Tips: டிமார்ட்டுக்கு எந்த டைம்ல போனா கூட்டமே இருக்காது? பணத்தை மிச்சப்படுத்த டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved