EPF கணக்கில் உள்ள பணத்தை NPS கணக்கிற்கு மாற்றலாமா?
ஓய்வூதியத் திட்டமிடல் தொடர்பான விழிப்புணர்வு நகர்ப்புற இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஓய்வுக்குப் பின் வருவாயை அதிகரிக்க விரும்புவோருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கிலிருந்து தேசிய ஓய்வூதியத் திட்ட (NPS) கணக்கிற்கு நிதியை மாற்றுவது அதிக பலனைக் கொடுக்கலாம்.
Retirement planning
ஓய்வூதியத் திட்டமிடல் தொடர்பான விழிப்புணர்வு நகர்ப்புற இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பலர் முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். வருவாயை அதிகரிக்க விரும்புவோருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கிலிருந்து தேசிய ஓய்வூதியத் திட்ட (NPS) கணக்கிற்கு நிதியை மாற்றுவது அதிக பலனைக் கொடுக்கலாம்.
EPFO funds transfer
EPF கணக்கில் இருந்து NPS கணக்கிற்குப் பணத்தை மாற்றுவது சாத்தியமானது என்றாலும், அதற்காகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சில உள்ளன. ஒருமுறை உங்கள் EPF சேமிப்பை NPS டயர் 1 கணக்கிற்கு மாற்றினால், அது NPS கணக்கில் குறிப்பிட்ட ஆண்டிற்கான பங்களிப்பாகக் கருதப்படாது என்பதால், பிரிவு 10(12) இன் கீழ் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
NPS benefits
இந்தப் பரிமாற்றத்தை மேற்கொள்ள உங்களிடம் செயல்பாட்டில் உள்ள NPS டயர் 1 கணக்கு இருக்க வேண்டும். பணிபுரியும் நிறுவனம் மூலமாகவோ, நேரடியாக பாயிண்ட் ஆஃப் பிரசன்ஸ் (POP) மூலமாகவோ அல்லது eNPS போர்டல் மூலமாகவோ இந்தப் பரிமாற்றத்தைச் செய்யலாம்.
EPF vs NPS
அங்கீகரிக்கப்பட்ட EPF அலுவலகத்தின் மூலம் பரிமாற்றத்தை மேற்கொள்ள, பணியாளர்கள் விண்ணப்பத்தை தங்கள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர். பின்னர் EPF கணக்கில் உள்ள பணம் உங்கள் NPS கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இவ்வாறு மாற்றப்பட்ட பணத்தை திரும்ப NPS கணக்கில் இருந்து EPF கணக்கிற்கு மாற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முன்கூட்டியே யோசித்து முடிவு எடுப்பது முக்கியம்.
Retirement fund
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஓய்வூதியத் திட்டத்திற்கான சிறந்த தேர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியுடன் (EPF) ஒப்பிடும்போது NPS பெரிய கார்பஸை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மே 2009 முதல் ரூ. 10,000 மாதாந்திர முதலீடு செய்திருந்தால், அது ஒரு EPF கணக்கில் ரூ. 35.1 லட்சமாக மாறியிருக்கும். அந்தத் தொகையை NPS கணக்கில் முதலீடு செய்திருந்தால், சுமார் ரூ.40.3 லட்சம் (25% ஈக்விட்டி ஒதுக்கீடு) முதல் ரூ. 51.2 லட்சம் (75% ஈக்விட்டி ஒதுக்கீடு) வரை பெருகி இருக்கும்.