MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Loan: 10 கிராம் தங்க செயினுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? வங்கிகளின் புதிய கணக்கு இதோ!

Gold Loan: 10 கிராம் தங்க செயினுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? வங்கிகளின் புதிய கணக்கு இதோ!

Gold Loan: அவசர பணத் தேவைக்கு தங்கக் கடன் பலருக்கு உடனடி தீர்வாக மாறியுள்ளது. ஆனால், 10 கிராம் தங்கத்திற்கு எவ்வளவு கடன் கிடைக்கும், எந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 12 2026, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அவசர பணத் தேவைக்கு தங்கக் கடன் ஒரு தீர்வா?
Image Credit : Asianet News

அவசர பணத் தேவைக்கு தங்கக் கடன் ஒரு தீர்வா?

மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணம் அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடிகள் போன்ற சூழ்நிலைகளில், தங்கக் கடன் பலருக்கும் உடனடி உதவியாக அமைகிறது. குறிப்பாக, கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், தங்கத்தின் அடிப்படையில் எளிதில் கடன் பெற முடிவதால், அதற்கான தேவை அதிகரித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
10 கிராம் தங்கத்திற்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?
Image Credit : istock

10 கிராம் தங்கத்திற்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?

பொதுவாக, வங்கிகள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. உதாரணமாக, 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் என்றால், வங்கிகளில் இருந்து சுமார் ரூ.75,000 வரை பெற முடியும். அதே நேரத்தில், சில NBFC-கள் 85 சதவீதம் வரை LTV விகிதத்தில் கடன் வழங்குகின்றன.

Related Articles

Related image1
New Aadhaar App: புதிய ஆதார் மொபைல் ஆப் அறிமுகம் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Related image2
IRCTC Lower Berth Tips: ரயிலில் லோயர் பெர்த் வேண்டும் என்றால் இதை செய்யுங்க.. ஐஆர்சிடிசி சீக்ரெட் டிப்ஸ்
35
வட்டி விகிதத்தில் இருக்கும் வித்தியாசம்
Image Credit : PR

வட்டி விகிதத்தில் இருக்கும் வித்தியாசம்

அரசுத் துறை வங்கிகளில் தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் பொதுவாக 8.65% முதல் 10% வரை இருக்கும். தனியார் வங்கிகளில் இது சற்று அதிகமாக இருக்கலாம். NBFC-களில் 9% முதல் 24% வரை வட்டி வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குறைந்த வட்டியை விரும்புவோர் வங்கிகளை தேர்வு செய்வது நல்லது.

45
திருப்பிச் செலுத்தும் முறையை கவனமாக தேர்வு செய்யுங்கள்
Image Credit : Asianet News

திருப்பிச் செலுத்தும் முறையை கவனமாக தேர்வு செய்யுங்கள்

இஎம்ஐ முறை, காலம் முழுவதும் வட்டி மட்டும் செலுத்தி இறுதியில் அசலை திருப்பிச் செலுத்தும் முறை, 'Bullet Repayment' போன்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. உங்கள் மாதாந்திர வருமானத்திற்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்வது அவசியம்.

55
நகையை பாதுகாக்க வேண்டும்
Image Credit : Indiamart

நகையை பாதுகாக்க வேண்டும்

தங்கக் கடன் பெறுவது எளிது என்பதற்காக தேவையில்லாமல் கடன் வாங்குவது ஆபத்தானது. செயலாக்கக் கட்டணம், அபராதக் கட்டணம் உள்ளிட்ட மறைமுக செலவுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த தவறினால், நகைகள் ஏலத்தில் விடப்படும் அபாயம் உள்ளது. எனவே, தங்கக் கடனை அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது புத்திசாலித்தனமான முடிவாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
கடன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cashew Farming: கோடிகளில் வருமானம் தரும் முந்திரி விவசாயம்.! முந்திரி சாகுபடி செய்யவது எப்படி? எளிய வழிமுறை இதோ.!
Recommended image2
Magalir Urimai Thogai Scheme: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை.! உடனே கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
Recommended image3
Construction Material Prices: வீடு கட்டுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த விஜய் அரசு அதிரடி!
Related Stories
Recommended image1
New Aadhaar App: புதிய ஆதார் மொபைல் ஆப் அறிமுகம் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Recommended image2
IRCTC Lower Berth Tips: ரயிலில் லோயர் பெர்த் வேண்டும் என்றால் இதை செய்யுங்க.. ஐஆர்சிடிசி சீக்ரெட் டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved