MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி.. குறைந்த வட்டி தரும் வங்கிகளின் முழு லிஸ்ட்

ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி.. குறைந்த வட்டி தரும் வங்கிகளின் முழு லிஸ்ட்

சொந்த வீடு கனவை நனவாக்க, குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கும் அரசு வங்கிகள் சிறந்த தேர்வாக உள்ளன. அவை என்னென்ன வங்கிகள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 09 2026, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குறைந்த வட்டி தரும் வங்கிகள்
Image Credit : Asianet News

குறைந்த வட்டி தரும் வங்கிகள்

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் வாழ்க்கை கனவு. ஆனால் அந்த கனவுக்குள் நுழையும்போது முதலில் எதிரே நிற்பது ஹோம் லோன் வட்டி விகிதம் தான். சிறிய வட்டி விகித மாற்றமே பல ஆண்டுகளில் மாத தவணை (EMI) மற்றும் மொத்த செலவை பெரிதாக உயர்த்திவிடும். அதனால் தான் நடுத்தர குடும்பங்கள் ஹோம் லோன் எடுக்கும் போது மிகவும் கவனமாக வங்கி தேர்வு செய்கிறார்கள்.

25
ஹோம் லோனுக்கு எந்த வங்கி பெஸ்ட்?
Image Credit : Getty

ஹோம் லோனுக்கு எந்த வங்கி பெஸ்ட்?

இந்த நிலையில், அரசு வங்கிகள் இன்று பலரின் முதல் விருப்பமாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் தெளிவான விதிமுறைகள், மறைமுக கட்டணங்கள் இல்லாத நடைமுறை மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையாகும். தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும் போது, ​​அரசு வங்கிகள் வட்டி குறைப்பு சலுகைகளை விரைவாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகவும் கருதப்படுகிறது. இதனால், ஹோம் லோன் தேடுபவர்களின் கவனம் மீண்டும் அரசு வங்கிகளின் பக்கம் திரும்பியுள்ளது.

Related Articles

Related image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Related image2
இனி Google Pay, PhonePe-ல் இப்படித்தான் பணம் அனுப்பணும்.. பிப்ரவரியில் பெரிய மாற்றம்
35
ஹோம் லோன் வட்டி
Image Credit : Getty

ஹோம் லோன் வட்டி

தற்போதைய சந்தை நிலவரப்படி, சில அரசு வங்கிகள் 7 சதவீதத்தைச் சுற்றிய வட்டி விகிதத்தில் ஹோம் லோன் வழங்கப்படுகிறது. இதில் பேங்க் ஆப் இந்தியா குறைந்த வட்டியாக சுமார் 7.10% விகிதத்தில் கடன் வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து கனரா வங்கி சுமார் 7.15% வட்டியில் ஹோம் லோன் வழங்குகிறது. நாடு முழுவதும் பெரிய வலையமைப்பு கொண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7.25% வட்டியில் கடன் வழங்கினாலும், பாதுகாப்பு மற்றும் சேவை காரணமாக பலர் இதையே தேர்வு செய்கிறார்கள்.

45
ஆர்பிஐயின் ரெப்போ வட்டி
Image Credit : PR

ஆர்பிஐயின் ரெப்போ வட்டி

அரசு வங்கிகளின் மற்றொரு பெரிய பலன் வெளிப்படைத்தன்மை. கடன் செயல்முறை கட்டணங்கள் குறைவாக இருப்பதோடு, பண்டிகை காலங்களில் செயலாக்க கட்டணம் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், ஆர்பிஐ ரெப்போ வட்டி குறையும் போது அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக மாற்றி வழங்குவது அரசு வங்கிகளின் வழக்கம்.

55
குறைந்த வட்டி விகிதம்
Image Credit : stockPhoto

குறைந்த வட்டி விகிதம்

ஆனால், குறைந்த வட்டி விகிதம் பெறுவதற்கு உங்கள் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் இருந்தால் தான் சிறந்த வட்டி கிடைக்கும். ஸ்கோர் குறைவாக இருந்தால் வட்டி அதிகரிக்கலாம். எனவே, ஹோம் லோன் எடுப்பதற்கு முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கவனிப்பது மிக அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கடன்
வங்கி
வங்கி விதிகள்
தனிநபர் நிதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சீனியர் சிட்டிசன்களுக்கு செம சான்ஸ்! PNB வங்கியின் புதிய வட்டி விகிதம்: எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Recommended image2
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!
Recommended image3
வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி!.. பான் கார்டு இருக்கா!.. ரியல் எஸ்டேட்டில் பெரிய மாற்றம்
Related Stories
Recommended image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Recommended image2
இனி Google Pay, PhonePe-ல் இப்படித்தான் பணம் அனுப்பணும்.. பிப்ரவரியில் பெரிய மாற்றம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved