வங்கி கணக்கில் பேலன்ஸ் இல்லாவிட்டாலும் 10,000 எடுக்கலாம்! இதுதான் சிறந்த வழி!
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் பலன்கள் முழுவதும் பலருக்கும் தெரியவதில்லை. அரசாங்கம் அதன் சந்தாதாரர்களுக்காக மிகவும் பயனுள்ள பல சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் வங்கிக் கணக்கு இல்லாத ஒவ்வொரு வயது வந்த நபரும் இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கலாம்.
PMJDY Overdraft
பிரதமரின் ஜன் தன் திட்டம் (PMJDY) என்பது அடிப்படையான சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, மலிவு விலையில் ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வது போன்ற நோக்கங்களைக் கொண்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ், அடிப்படை சேமிப்புக் கணக்கை எந்த வங்கிக் கிளையிலும் அல்லது பேங்க் மித்ரா கடையிலும், வேறு கணக்கு இல்லாத நபர்கள் தொடங்கலாம்.
PMJDY details
இந்நிலையில் இத்திட்டம் குறித்து ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய தொடர் கேள்விகளுக்கு நிதி அமைச்சகம் சமீபத்தில் பதிலளித்தது. PMJDY திட்டத்தின் கீழ் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை, மாநில வாரியான பயனாளிகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் விபத்து காப்பீடு மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதி போன்ற பலன்கள் பற்றிய விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் நர்ஹரி அமீன் கோரினார்.
PMJDY Account
கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஜன் தன் திட்டம் பற்றிய சமீபத்திய புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார். நவம்பர் 13, 2024 நிலவரப்படி, ஜன் தன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 53.99 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் மட்டும் 1.90 கோடி கணக்குகள் உள்ளன.
PMJDY Overdraft Eligibility
இந்தத் திட்டம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ. 10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதியை வழங்குகிறது, தேவைப்படுபவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. கூடுதலாக, அனைத்து கணக்குதாரர்களுக்கும் இலவசமாக RuPay டெபிட் கார்டு கிடை்க்கிறது.
Jan Dhan Account Benefits
ஜன் தன் யோஜனா ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டை உள்ளடக்கியது. காப்பீட்டுப் பலன்களைப் பெற, கார்டுதாரர்கள் தங்கள் ரூபே கார்டைப் பயன்படுத்தி குறைந்தது ஒரு வெற்றிகரமான நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனையை 90 நாட்களுக்குள் செய்ய வேண்டும். ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம், இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் அல்லது பிஓஎஸ் டெர்மினல் போன்ற எந்தவொரு சேனலிலும் இந்தப் பரிவர்த்தனையைச் செய்யலாம்.
RuPay Card for Jan Dhan Yojana
ஜன் தன் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகள் நேரடி வங்கிப் பரிவர்த்தனை (DBT), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), அடல் பென்ஷன் யோஜனா (APY), முத்ரா (MUDRA) திட்டம் ஆகியவற்றின் கீழ் பயன்பெறக்கூடியவை.