MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • UPI, RuPay பரிவர்த்தனைக்கு மீண்டும் MDR கட்டணம்! பழைய விதி மீண்டும் வருது!

UPI, RuPay பரிவர்த்தனைக்கு மீண்டும் MDR கட்டணம்! பழைய விதி மீண்டும் வருது!

UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணங்களை மீண்டும் விதிக்க அரசு பரிசீலிக்கிறது. இது வணிகர்களை பாதிக்கும், வாடிக்கையாளர்களை பாதிக்காது என கூறப்படுகிறது.

1 Min read
Author : SG Balan
Published : Mar 13 2025, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பெரிய வணிகர்களுக்கான UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணங்களை மீண்டும் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

2022ஆம் ஆண்டுக்கு முன்பு, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வணிகர்கள் வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் சிறிய கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்தது.  2022ஆம் ஆண்டில் இந்தக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் கொண்டுவர இப்போது மத்திய அரசு திட்டமிடுகிறது.

25

இப்போது, ​​வாடிக்கையாளர்கள் செய்யும் UPI அல்லது RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.  MDR கட்டணங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், அது UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை நேரடியாகப் பாதிக்காது. ஆனால், அவர்கள் செலுத்தும் தொகையைப் பெறும் வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

35

இந்தக் கட்டணத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான முன்மொழிவை தொழில்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்புடைய துறைகள் இப்போது இதை பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

45

ஏற்கனவே பெரிய வணிக நிறுவனங்கள் விசா, மாஸ்டர்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணத்தைச் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் இனி UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் MDR கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55

ஆனால், அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை முறையான UPI க்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் இந்தத் துறையில் உள்ள பல வணிக நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவது கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image3
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved