MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அடிதூள்! ரூ.2,680 குறைந்த தங்கம் விலை! குஷியில் நகைப்பிரியர்கள்!

அடிதூள்! ரூ.2,680 குறைந்த தங்கம் விலை! குஷியில் நகைப்பிரியர்கள்!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 வரை குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 08 2025, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tamilnadu Gold Rate

Tamilnadu Gold Rate

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம்

தங்கம் விலை கடந்த 3 மாதங்களில் ரூ.10,000 முதல் ரூ.15,000 முதல் உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் நடுத்தர மக்கள் நகை வாங்க முடியாத சூழல் நிலவி வந்தது. அதாவது ஒரு சவரன் வரலாறு காணாத வகையில் உயர்ந்து ரூ.69,000ஐ நெருங்கி நகைப்பிரியர்களை பீதி அடைய செய்தது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டு வந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Gold Rate

Gold Rate

தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உலக அளவில் தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பதே காரணம். அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் தங்கம் புதிய உச்சத்தை எட்டியது . இதற்கு உலக நாடுகளிடையே நிலவும் வர்த்தக ரீதியான தாக்கமும் முக்கிய காரணம் என கூறப்பட்டு வந்தது.

36
Gold

Gold

அமெரிக்க அதிபர் டிரம்ப் 

இந்நிலையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். அதேபோல பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்ப பெறுவது போன்ற காரணங்களால் தற்போது தங்கம் விலை சரசரவென குறைந்து வருகிறது.

இதையும் படிங்க:  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

46
Yesterday Gold Rate

Yesterday Gold Rate

நேற்றைய தங்கம் விலை

கடந்த  வியாழக்கிழமை சவரனுக்கு 1,280 ரூபாயும், வெள்ளிக்கிழமை ரூ.720, சனிக்கிழமை ரூ.200, நேற்று ரூ.480 குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285-க்கு விற்பனையானது. 

56
Today Gold Rate

Today Gold Rate

இன்றைய தங்கம் விலை

இன்று (ஏப்ரல் 08) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225-க்கு விற்பனையாகிறது.  

இதையும் படிங்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! எரிய வேண்டியது அடுப்பா? வயிறா? சொல்வது யார் தெரியுமா?
 

66
24 karat gold

24 karat gold

கடந்த 5 நாட்களில் ரூ.2,680 குறைந்த தங்கம்

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 8,972-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.71,776-ஆக விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,680 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
தங்க நகை
இன்றைய தங்கம் விலை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved