MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Savings Scheme 2026: புதுசா நகை சீட்டு போட போறீங்களா? இந்த 6 விஷயங்களை செஞ்சா 100 பவுன் வாங்காலம்.!

Gold Savings Scheme 2026: புதுசா நகை சீட்டு போட போறீங்களா? இந்த 6 விஷயங்களை செஞ்சா 100 பவுன் வாங்காலம்.!

சரியான திட்டமிடலுடன் நகை சீட்டு போன்ற தங்க சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், 100 பவுன் தங்கம் கூட சேமிக்க முடியும். யாருக்கும் தெரியாத  யாரும் சொல்லாத சில வழிமுறைகள் உங்கள் தங்க சேமிப்பு இலக்கை அடைய உதவும்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 12 2026, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
100 பவுன் தங்கத்தைக் கூட சேமிக்க முடியும்
Image Credit : Pinterest

100 பவுன் தங்கத்தைக் கூட சேமிக்க முடியும்

தமிழர்களின் வாழ்க்கையில் தங்கத்திற்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. திருமணம், குழந்தைகளின் எதிர்காலம், குடும்ப விழாக்கள், முதலீடு என பல காரணங்களுக்காக மக்கள் தங்கத்தை சேமித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஒரே நேரத்தில் அதிக அளவு தங்கம் வாங்குவது பலருக்கு சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளது.

அதனால்தான் பலர் நகை சீட்டு அல்லது தங்க சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து மாதந்தோறும் சிறு தொகைகளை சேமித்து தங்கத்தை வாங்கும் வழியை தேர்வு செய்கிறார்கள். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், நீண்ட காலத்தில் 50 பவுன், 75 பவுன் மட்டுமல்ல, 100 பவுன் தங்கத்தைக் கூட சேமிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு சில முக்கியமான விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
சிறிய தொகையில் தொடங்கி சேமிப்பு பழக்கத்தை உருவாக்குங்கள்
Image Credit : Pinterest

சிறிய தொகையில் தொடங்கி சேமிப்பு பழக்கத்தை உருவாக்குங்கள்

நகை சீட்டு போடும்போது பலர் ஆரம்பத்திலேயே ரூ.10,000 அல்லது ரூ.20,000 மாத தவணையை தேர்வு செய்கிறார்கள். ஆனால் சில மாதங்கள் கழித்து அதை தொடர்ந்து செலுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே முதலில் உங்கள் வருமானத்திற்கு ஏற்ற வகையில்ரூ.500, ரூ.1,000 அல்லது ரூ.2,000 போன்ற சிறிய தொகையில் தொடங்குங்கள். முக்கியமானது தொகை அல்ல; தொடர்ந்து சேமிக்கும் பழக்கம்தான். இந்த ஒழுக்கம் உருவானால் பின்னர் பெரிய தொகைகளில் சீட்டு போட்டு அதிக தங்கத்தை சேமிக்க முடியும்.

38
எந்த நோக்கத்திற்காக தங்கம் சேமிக்கிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்
Image Credit : pinterest

எந்த நோக்கத்திற்காக தங்கம் சேமிக்கிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்

நகை சீட்டு போடும் முன் "ஏன் தங்கம் வாங்க வேண்டும்?" என்ற கேள்விக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். மகளின் திருமணத்திற்காகவா? குழந்தையின் எதிர்காலத்திற்காகவா? அல்லது முதலீட்டுக்காகவா?

இலக்கு தெளிவாக இருந்தால் அதற்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யலாம். உதாரணமாக 10 ஆண்டுகள் தொடர்ந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்தால், 100 பவுன் தங்கத்தைக்கூட எளிதாக சேர்க்க முடியும். இலக்கு இல்லாமல் சேமித்தால் இடையில் திட்டம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

48
சேதாரம் குறைவாக உள்ள கடைகளை மட்டும் தேர்வு செய்யுங்கள்
Image Credit : pinterest

சேதாரம் குறைவாக உள்ள கடைகளை மட்டும் தேர்வு செய்யுங்கள்

பலர் தங்கத்தின் விலையை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதிக பணத்தை விழுங்குவது சேதாரம் மற்றும் செய்கூலிதான். ஒரு நகைக்கடை 18% சேதாரம் வசூலிக்கிறது என்றால், மற்றொரு கடை 8% அல்லது 10% மட்டுமே வசூலிக்கலாம். இந்த வித்தியாசம் நீண்ட காலத்தில் பல கிராம் தங்கத்தை உங்களுக்கு கூடுதலாக பெற்றுத்தரும்.எனவே சீட்டில் சேரும் முன் குறைந்த சேதாரம், குறைந்த செய்கூலி மற்றும் சிறப்பு சலுகைகள் உள்ள கடைகளை ஒப்பிட்டு தேர்வு செய்யுங்கள்.

58
916 ஹால்மார்க் தங்கத்தை மட்டுமே வாங்குங்கள்
Image Credit : pinterest

916 ஹால்மார்க் தங்கத்தை மட்டுமே வாங்குங்கள்

சிலர் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரம் குறைந்த நகைகளை வாங்கி பின்னர் நஷ்டம் அடைகிறார்கள். எப்போதும் 916 ஹால்மார்க் முத்திரை கொண்ட 22 காரட் தங்க நகைகளையே வாங்க வேண்டும். அதோடு ரசீது, தரச் சான்றிதழ் மற்றும் BIS ஹால்மார்க் விவரங்கள் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.தரம் உள்ள தங்கம் வாங்கினால் எதிர்காலத்தில் அடகு வைப்பதற்கும், மறுவிற்பனை செய்வதற்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

68
கல் பதித்த நகைகளை வாங்கும்போது இருமுறை யோசியுங்கள்
Image Credit : pinterest

கல் பதித்த நகைகளை வாங்கும்போது இருமுறை யோசியுங்கள்

அழகாக இருப்பதால் பலர் கல் பதித்த நகைகளை தேர்வு செய்கிறார்கள். ஆனால் முதலீட்டு நோக்கில் பார்க்கும்போது இது நல்ல முடிவு அல்ல. ஏனெனில் கற்களுக்காக நீங்கள் செலுத்தும் பணம் பின்னர் திரும்ப கிடைக்காது. அடகு வைக்கும் போது கற்களின் மதிப்பு கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இதனால் கணிசமான இழப்பு ஏற்படலாம். அதனால் அதிக தங்கத்தை சேமிக்க வேண்டும் என்றால் எளிமையான, தூய தங்க நகைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

78
விலை குறையும் காலங்களில் வாங்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்
Image Credit : pinterest

விலை குறையும் காலங்களில் வாங்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்

தங்க விலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நாட்களில் விலை குறையும். அந்த நேரங்களில் தங்க நாணயங்கள் அல்லது சிறிய அளவிலான நகைகளை வாங்கி சேமித்து வைத்தால் நீண்ட காலத்தில் பெரிய பலன் கிடைக்கும். தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்துடன் இதையும் இணைத்தால் பல ஆண்டுகளில் 100 பவுன் தங்கம் என்ற இலக்கை அடைவது கடினமான விஷயம் அல்ல.

88
திட்டமிட்டு சேமித்தால் நீங்களும் நகை கடை ஓனர்
Image Credit : Voylla

திட்டமிட்டு சேமித்தால் நீங்களும் நகை கடை ஓனர்

நகை சீட்டு என்பது வெறும் சேமிப்பு திட்டம் அல்ல. அது குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்கான ஒரு புத்திசாலித்தனமான நிதித் திட்டமாகும். மாதந்தோறும் ஒழுங்காக சேமிப்பது, குறைந்த சேதாரம் உள்ள கடைகளை தேர்வு செய்வது, தரமான ஹால்மார்க் தங்கத்தை வாங்குவது, கல் பதித்த நகைகளை தவிர்ப்பது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீண்ட காலத்தில் கணிசமான அளவு தங்கத்தை சேமிக்க முடியும்.இன்று சிறிய தொகையில் தொடங்கும் சேமிப்புதான் நாளை உங்கள் குடும்பத்திற்கு 50 பவுன், 75 பவுன் அல்லது 100 பவுன் தங்கமாக மாறக்கூடும். எனவே திட்டமிட்டு சேமியுங்கள்; தங்கமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறைகள்
தங்க இறக்குமதி விதிகள்
தங்க நகை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
முதலீடு
வணிக யோசனை
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Business Idea: வீட்டிலேயே ரூ.5,000 முதலீட்டில் தொழில் தொடங்கலாம்! தீபாவளி சீசனில் நல்ல வாய்ப்பு
Recommended image2
Gold Rate Today: தங்கம் விலை அதிரடி சரிவு.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 குறைவு – இப்போ வாங்கலாமா?
Recommended image3
Uzhavar Santhai Vegetable Price Today: கூடைகளில் குவிந்து கிடக்கும் காய்கறிகள்.! பை பையாய் அள்ளிச்செல்லும் இல்லத்தரிகள்.!
Related Stories
Recommended image1
Business: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 பிஸ்னஸ் ஐடியாக்கள்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் ஜாலியா.!
Recommended image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved