MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (October 18): தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு.! நிரம்பி வழிந்த நகை கடைகள்.!

Gold Rate Today (October 18): தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு.! நிரம்பி வழிந்த நகை கடைகள்.!

கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது சரிவடைந்துள்ளது. திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த விலை குறைவால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 18 2025, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சட்டென்று குறைந்த தங்கம் விலை!
Image Credit : Asianet News

சட்டென்று குறைந்த தங்கம் விலை!

கடந்த 2 வார காலமாக அதிகரித்து வந்த தங்கம் வார இறுதி வர்த்த நாளில் சரிவடைந்துள்ளதால் திருமண ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் திருமண சீசன் மற்றும் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளதால் பலரும் நடை கடைகள் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதுவும் பெண்கள் காலையிலேயே நகைக்கடையில் குவிந்ததால் பல கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் ஏறிய வேகத்தில் குறைந்து அனைத்து தரப்பு மக்களையும் குஷிப்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை
Image Credit : Asianet News

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 2,000 ரூபாய் குறைந்து 95,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1 கிராம் 190 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 190 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 13 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

33
விலை குறைய காரணம் இதுதான்.!
Image Credit : Gemini

விலை குறைய காரணம் இதுதான்.!

சர்வதேச சந்தையில் தங்கம் தேவை குறைந்தது, மற்றும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியது உள்ளிட்ட காரணங்களே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய காரணமாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். போர் போன்ற பதற்றங்கள் ஏற்கனவே தங்க விலையை உயர்த்தியிருந்தன. இப்போது அந்தப் பதற்றம் சற்று குறைந்து, உலக அளவில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கத்தின் "பாதுகாப்பு" தேவை குறைந்து விலை சரிந்தது. 

கச்சா எண்ணெய் விலை குறைதல் மற்றும் ரூபாய் மதிப்பு ஸ்திரத்தன்மை தங்க இறக்குமதி செலவைக் குறைக்க உதவியது. மேலும், வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்தால், மக்கள் தங்கத்தை விட்டு ஃபிக்ஸ் டெபாசிட் போன்ற பாதுகாப்பான ஆப்ஷன்களுக்கு மாற்றியது போன்றவையும் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
தங்க நகை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
முதலீடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI Payments: UPI கட்டணம் இனி வேண்டாம்! கூடுதல் சார்ஜ் வராமல் பணம் செலுத்த 5 சூப்பர் ட்ரிக்ஸ்
Recommended image2
EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Recommended image3
Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த தகவலை மிஸ் பண்ணாதீங்க!
Related Stories
Recommended image1
தொழில் பல மடங்கு பெருகணுமா? லிங்க்டுஇன்-ன இப்படி யூஸ் பண்ணுங்க பணம் கொட்டும்!
Recommended image2
தீபாவளி முதலீடு: தங்கத்தில் போடலாமா? பங்குகளை வாங்கலாமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved