- Home
- Business
- Gold Rate: ஞாயிற்றுக்கிழமை அதுவுமா அதிர்ச்சி.. தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: ஞாயிற்றுக்கிழமை அதுவுமா அதிர்ச்சி.. தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Silver Rate: சர்வதேச காரணிகள் மற்றும் சுங்க வரி உயர்வால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்றைய (மே 24) நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய உச்சத்தில் தங்கம் விலை
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தைதொட்டு, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்கும் எண்ணம் கனவாக போய்விடுகிறது. தங்கம் விலை உயர்வுக்கான காரணம் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

சுங்க வரியை உயர்த்திய மத்திய அரசு
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. இதையடுத்து அன்றைய தினமே தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று இன்றை தங்கம் விலை ஏறியதா இறங்கியதா என்பதை பார்ப்போம்.
நேற்றைய தங்கம் விலை
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்றை தங்கம் விலை நிலவரம்?
இந்நிலையில் இன்றைய (மே 24) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு சவரன் ரூ.1,17,840க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.14,730ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் விலை ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.295,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

