- Home
- Business
- Gold Rate today: தங்கம் விலை வீழ்ச்சி.! நகை கடைகளில் கூட்ட நெரிசல்.! புதிய டிசைன் நகைகள் விற்பனை ஜோர்.!
Gold Rate today: தங்கம் விலை வீழ்ச்சி.! நகை கடைகளில் கூட்ட நெரிசல்.! புதிய டிசைன் நகைகள் விற்பனை ஜோர்.!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்து, நடுத்தர மக்களுக்கு நிம்மதி. சர்வதேச சந்தை ஏற்றம் மற்றும் போர் பதற்றம் இல்லாததால் தங்கத்தில் முதலீடு குறைந்து விலை சரிவு.

நிம்மதி, சந்தோஷம் தரும் தங்கம் விலை
கடந்தவாரம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை தற்போது கீழ்நோக்கி இறங்கி வருகிறது. இதனால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் குறைந்துள்ளது. வரும் நாட்களில் குறையும் என காத்திருக்காமல் தற்போதைய நிலையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை அதிரடி சரிவு!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ரூ.9210 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 குறைந்து ஒரு சவரன் 73,680 ரூபாயாக உள்ளது. இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நடுத்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் 1 கிராம் 128 ரூபாய்க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாங்கி குவிக்கலாம்! கடைக்கு போக ரெடியா!
போர் பதற்றம் இல்லாததாலும், சர்வதேச சந்தைகள் ஏற்றத்தில் உள்ளதாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யாமல் பங்கு சந்தைகளில் முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுளளனர். இதுவே விலை சரிவுக்கு காரணமாக தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய விலை விலை வீழ்ச்சியை நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தங்கம் விலை குறைந்ததன் காரணமாக நகை கடைகளில் கூட்டம் காணப்பட்டது. போட்டி போட்டுக்கொண்டு புதிய டிசைன் நகைகளை இளம் பெண்கள் வாங்கி மகிழ்ந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.