Gold Rate Today: தங்கம் விலை மேலும் உயர்வு.! வெறிச்சோடிய நகை கடைகள்.!
ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்து வருவதால் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் கவலை அடைந்துள்ளனர்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி சிறிது அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடத்த வர்க்கத்தினரும், திருமணம் உள்ளிட்ட விசேஷம் வைத்துள்ளவர்களும் கவலை அடைந்துள்ளனர்.
இன்னைக்கும் விலை இறங்கவில்லை.!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.9400 வாக உள்ளது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 75,200 ரூபாயாக உள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை 75 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 127 ரூபாயாகவும், 1 கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.
விலை குறைய வாய்ப்பு
சர்வதேச நிலவரம், அமெரிக்காவுடனான உறவு போன்றவை இந்திய சந்தைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பில் தளர்வு போன்றவை அறிவிக்கப்படும் பட்சத்தில் தங்கம் விலை மீண்டும் சரிவடையும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.