MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today: தங்கம் விலை சரிவு! நகைக் கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

Gold Rate Today: தங்கம் விலை சரிவு! நகைக் கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சரிந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Jun 20 2025, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
Image Credit : our own

மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் எதிர்பார்த்தபடியே சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சரிவடைந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.திருமணங்கள், விழாக்கள், முதலீடு என பல்வேறு காரணங்களுக்காக பொது மக்கள் தங்கத்தை வாங்கி வைத்திருக்கிறார்கள். இது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 20, 2025) தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது மக்களுக்கு சிறு நிம்மதியைக் கொடுக்கிறது.

25
தற்போதைய விலை நிலவரம்
Image Credit : Google

தற்போதைய விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் ரூ.73,680 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு 55 ரூபாய் சரிவடைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9,210 ஆக உள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூாபாய் குறைந்து ஒரு கிராமுக்கு வெள்ளி ரூ.120 என்ற நிலையில் உள்ளது. இந்த விலை குறைவு, கடந்த சில நாட்களில் நிலவிய சிறிய அளவிலான ஏற்றத் தாழ்வுகளுக்குப் பிறகு நடந்துள்ளது. வாடிக்கையாளர்கள், குறிப்பாக திருமண பருவம் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கம் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.

Related Articles

Related image1
ஆயுதமாக மாறும் தங்கம்.! வாங்கி குவிக்கும் வங்கிகள்.! De-dollarization காரணமா?
Related image2
Gold:தங்க நகையின் தூய்மை! APP உதவும், கவலை வேண்டாம்!
35
கடந்த வார விலை நிலவரம்
Image Credit : our own

கடந்த வார விலை நிலவரம்

ஒரு வாரத்துக்கு முன்னர், சவரன் தங்கத்தின் விலை ரூ.74,800 ஆக இருந்தது. அதாவது, ஒரு வாரத்துக்குள் சுமார் ரூ.1,120 விலை குறைந்திருக்கிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை கடந்த வாரம் ரூ.9,350 ஆக இருந்தது. வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து ரூ.120 என்ற அளவிலேயே நிலைத்து உள்ளது.  இந்த விலை மாற்றங்கள், சர்வதேச சந்தையில் உள்ள நிலைமைகள், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மத்திய வங்கி கொள்கைகள், மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தக வரிகள் போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன.

45
தங்கம் வாங்கும் நேரம் இதுவா?
Image Credit : our own

தங்கம் வாங்கும் நேரம் இதுவா?

விலை குறைந்த செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக நகைக்கடைகள், தங்கள் விற்பனையை ஊக்குவிக்க தங்க நகை வாங்குவோருக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவித்து வருகின்றன. வணிக வல்லுநர்களின் கூற்றுப்படி, இது தற்காலிகமான விலை வீழ்ச்சியாக இருக்கலாம் என்வும் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடிய சாத்தியம் இருப்பதால், தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்கு இது ஒரு நல்ல தருணமாகவும் பார்க்கப்படுகிறது.

55
தங்கம் எனும் பாதுகாப்பான முதலீடு
Image Credit : our own

தங்கம் எனும் பாதுகாப்பான முதலீடு

தங்கம் என்பது எப்போதும் நிலையான முதலீடாகவே இருக்கிறது. விலைகளில் ஏற்படும் குறுகியகால மாற்றங்கள் பொதுவானவை. ஆனால் நீண்டகால அடிப்படையில், தங்கத்தின் மதிப்பு உயர்வு நோக்கத்தில் செல்லும் என்பதே நிபுணர்களின் அறிவுரை.அதனால், சென்னையில் தற்போது உள்ள ரூ.73,680 என்ற விலை, கடந்த வாரத்தின் விலையை விட குறைவாகவே இருப்பதால், இது வாங்க வேண்டிய நேரமா என மக்கள் பரிசீலித்து வருகின்றனர். தற்போதைய சூழலில், தங்கம் வாங்கும் முன் விலை நிலவரத்தை அடிக்கடி கவனிப்பதும், தேவைக்கேற்ப செயல்படுவதும் நன்மையாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
ஆயுதமாக மாறும் தங்கம்.! வாங்கி குவிக்கும் வங்கிகள்.! De-dollarization காரணமா?
Recommended image2
Gold:தங்க நகையின் தூய்மை! APP உதவும், கவலை வேண்டாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved