2 நாளில் 1,000 ரூபாயை கடந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மார்ச் 4, 2025 அன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ₹64,080 ஆக இருந்தது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இல்லத்தரசிகள் மத்தியில் தொடர் தங்க விலை உயர்வு ஆனது கவலையை உண்டாக்கி உள்ளது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரம், நாணய மதிப்பு மாற்றங்கள், அரசின் இறக்குமதி வரிகள், உள்ளூர் நகை விற்பனையாளர்களின் கொள்கைகள் ஆகியவை போன்ற காரணிகளால் மாற்றமடைகிறது.
Gold Rate Down
ஒவ்வொரு நாளும் விலை மாறுபடும் காரணத்தால், தங்கம் வாங்கும் முன் தற்போதைய நிலையை சரிபார்ப்பது அவசியம். சென்னையில் மார்ச் 4, 2025 அன்று தங்கத்தின் விலை உயர்வைக் கண்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமத்திற்கு ₹8,010 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹64,080 ஆகவும் இருந்தது.
gold rate today in Chennai
இது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் ஒரு சவரன் ₹560 உயர்ந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமத்திற்கு ₹8,738 ஆகவும், 8 கிராமுக்கு ₹69,904 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3, 2025 அன்று, 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹7,940 ஆக இருந்தது.
Chennai,Gold price hike
அதே நேரத்தில் 24 கேரட் தங்கம் ₹8,662 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிதாக மாற்றம் காணப்படவில்லை. மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும் இதே விலையே நிலவியது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
Gold price March 5
அதன்படி 1 கிராம் ₹8,010, 1 சவரன் ₹64,080, மற்றும் 10 கிராம் ₹80,100 ஆக விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,738, 1 சவரன் ₹69,904, மற்றும் 10 கிராம் ₹87,380 என உயர்வு கண்டுள்ளது. 18 கேரட் தங்கத்தின் விலையும் அதிகரித்து, 1 கிராம் ₹6,600, 1 சவரன் ₹52,800, மற்றும் 10 கிராம் ₹66,000 ஆக உள்ளது.
அதிக பொருட்களை உங்க வண்டியில் வைக்கணுமா? டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவை!!