- Home
- Business
- வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?
தங்கம் விலை சவரனுக்கு ₹60,880 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எனவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நடுத்தர மக்களுக்கு இஎம்ஐ மூலம் தங்கம் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு கணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நாள் தோறும் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் வரும் நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை ஈசியாக எட்டி விடும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடையும் நகைப்பிரியர்கள் தற்போதே தங்கத்தை வாங்கி வைக்கலாம் என தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.
தங்கத்தில் முதலீடு
மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் கிடைக்கும் என்ற காரணத்தாலும் அதிகளவு முதலீடு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் நடுத்தர வரக்க மக்களால் தங்கம் வாங்க முடியாத வகையில் எட்டாத உயரத்தில் சென்றுள்ளது. நகைக்கடைகளில் உள்ள நகைகளை வேடிக்கை மட்டுமே நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் நடுத்தர வர்க்க மக்களும் தங்கத்தை வாங்கும் வகையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இஎம்ஐ மூலம் தங்கம்
தற்போது டிவி, ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்கள் இஎம்ஐ மூலம் மக்கள் வாங்கி வருகிறார்கள். எனவே தங்கத்தையும் இஎம்ஐ மூலம் வாங்குவது தொடர்பாக அனுமதி அளிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு தொடக்கமே தங்கத்தின் விலை உயர்வோடு தான் தொடங்கியது. அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை 60ஆயிரத்தை கடந்தது. . அந்த வகையில் நேற்று முன் தினம் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 60ஆயிரத்து 760 ரூபாய்க்கும், நேற்று ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 60ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
இன்றைய தங்கம் விலை
இன்று தங்கத்தின் விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து 7730 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 61 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 1000 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.