விடாமல் உயரும் தங்கம் விலை.! இன்று மட்டும் ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா.?
தங்கத்தின் விலை 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து, சவரனுக்கு ரூ.63,000ஐத் தாண்டியுள்ளது. இதனால் தங்க நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விடாமல் உயரும் தங்கம் விலை.! இன்று மட்டும் ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா.?
தங்கத்தின் விலையானது எப்போதும் இல்லாத வகையில் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.62,000 என்ற விலையைத் தாண்டியது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலை நீடித்தது. இந்த விலை உயர்வானது அடுத்த சில நாட்களிலையே 63ஆயிரத்தை கடந்து எட்ட முடியாத உச்சத்தை தொட்டுள்ளது.
தங்க முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்
தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்தவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அதே நேரம் திருமணங்கள், விஷேசங்களுக்காக தங்க நகைகளை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபரக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தங்கத்தின் விலையானது சவரனுக்கு 4ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்ன.?
தங்கம் விலை உயர்விற்கு காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்தடுத்து புதிய இறக்குமதி வரிகளை பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக விதித்து வருவதால், பல்வேறு நாடுகள் அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகளவு பேர் மெற்கொண்டு வருவதால் தங்கம் விலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
நேற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை
நேற்றும் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. கிராம் ஒன்றுக்கு 95 ரூபாய் உயர்ந்து 7905 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 1600 ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்று தங்கத்தின் விலை என்ன.?
இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 7930 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.