- Home
- Business
- இப்போ விட்டால் இனி வாய்ப்பே இல்லை.! சரசரவென குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவு குறைவா.?
இப்போ விட்டால் இனி வாய்ப்பே இல்லை.! சரசரவென குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவு குறைவா.?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 4 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனிடையே தங்கத்தின் விலையானது நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று குறைந்துள்ளது.

குஷியோ குஷி.! சரசரவென குறைந்த தங்கம் விலை.!
தங்கத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களே அதிகளவு தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கததை சேமிப்பாக மட்டுமில்லாமல் நடுத்தர வர்க்க மக்களுக்கு முதலீடாகவும் தங்கத்தை வாங்கினார்கள்.
ஆனால் தற்போது தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை தினந்தோறும் சந்தித்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
அந்த வகையில் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் அளவிற்கு ஒரு சவரனுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏற்கனவே அதிகளவு தங்கத்தை வாங்கு குவித்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பால் வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் இந்தியாவில் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
அதிர்ச்சியில் பொதுமக்கள்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொது மக்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறையினர் என பல்வேறு தரப்பினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தங்கத்தின் விலை ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு விலை 80 ரூபாய் அதிகரித்து 8,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64,480க்கு ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரம் ரூபாயை தாண்டியிருப்பது நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது.
சரிந்தது தங்கம் விலை
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது நீண்ட நாட்களுக்கு பிறகு சரசரவென சரிந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 7940 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.