- Home
- Business
- நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.! மீண்டும் குறைந்த தங்கம் விலை- ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.! மீண்டும் குறைந்த தங்கம் விலை- ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கம் என்பது ஆடம்பர பொருளாக இருந்தாலும் மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களே அதிகளவு தங்கத்தை வாங்கு குவிக்கிறார்கள். இந்திய கலாச்சாரத்தில் திருமணம் போன்ற விஷேசங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கும், மேலும் விஷேச நாட்களில் தங்களின் அந்தஸ்தை காட்டுவதற்காகவே தங்கத்தை அதிகளவில் உயர் வகுப்பு மக்கள் அணிய விரும்புவார்கள். இதன் காரணமாகவே தங்கம் விலை கூடினாலும் நகைக்கடைகளில் கூட்டம் தொடர்ந்து காணப்படுகிறது.
gold rate
அதே நேரம் தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 60 நாட்களில் தங்கத்தின் விலை 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் திருமணத்திற்கு தங்களது பெண் பிள்ளைகளுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு கூடுதலாக தங்க நகைகளுக்கு பணம் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தங்கத்தின் விலை கடந்த வாரம் சரிந்து வந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
gold rate
நேற்று முன்தினம் (மார்ச் 4-ஆம் தேதி) தங்கம் விலை மீண்டு அதிகரித்தது. அதன் படி கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கத்தின் விலையானது உச்சத்தை தொட்டது. இதன் படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனையானது.
gold rate
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன் படி, தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 8ஆயிரத்து 20 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் உயர்ந்தால் அடுத்த சில நாட்களில் 300 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே குறைகிறது. எனவே தற்போது சிறிய அளவு குறைந்துள்ள தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் ஓரளவு நிம்மதியில் உள்ளனர்.