சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு.! இரண்டே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025ல் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கத்தை விரும்பும் இந்திய மக்கள்
தங்கம் என்பது ஆடம்பர பொருளாக இருந்தாலும் இந்திய மக்கள் அதிகம் விரும்பி அணியும் ஆபரணமாக தங்கம் உள்ளது. அந்த வகையில் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்கள் டிசைன் டிசைனாக தங்க நகைகளை அணிவார்கள். இதனால் தங்கத்தின் விலை கூடினாலும் கவலைப்படாமல் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இருந்த போதும் நடுத்தர வர்க்க மக்கள் நகைக்கடைகளில் நகைகளை வாங்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிகழ்வு தான் ஏற்பட்டுள்ளது.
gold rate
தங்கத்தில் முதலீடு
அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சவரன் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் ஒரு சவரனுக்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் 40ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது 59ஆயிரம் ரூபாயை கடந்த தங்கத்தின் விலை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Gold rate
ஏறி இறங்கும் தங்கம் விலை
இதனால் நடுத்தர வரக்க மக்கள் தங்கத்தை வாங்க முடியுமோ என்ற அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகளால் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரனுக்கு 4ஆயிரம் ரூபாய் வரை குறைந்த தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நாள் தோறும் 600 ரூபாய் கூடினால் 400 ரூபாய் குறையும்,. இதே போல கடந்த மாதம் வரை நீடித்த ஏறி இறங்கிய தங்கம் விலை இந்தாண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Gold rate
நகைப்பிரியர்களுக்கு ஷாக்
அந்த வகையில் 2025ஆம் ஆண்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. இதன் படி நேற்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 7390 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 59ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Gold rate
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 60 கிராம் அதிகரித்து 7ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 480 ரூபாய் 59ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் 60ஆயிரத்தை நாளையே கடக்கும் நிலை உருவாகியுள்ளது.