விடாமல் உயரும் தங்கம் விலை.! இன்று மட்டும் ஒரு கிராமுக்கு இவ்வளவு அதிகரித்ததா.?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஒரு சவரன் 60,000 ரூபாயைத் தொட்ட நிலையில், சிறிது குறைந்து மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 58,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Gold rate
தங்கம் விலை உயர்வு
தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கம் விலையானது சவரனுக்கு 40ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாய் என்ற விலையை தொட்டது.
இதனையடுத்து சரசரவென தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு 4ஆயிரம் ரூபாய் அளவிற்கு குறைந்தது. இதற்கு அமெரிக்க தேர்தல் முடிவுகள் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
gold rate
நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
தங்கத்தின் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்த தங்கத்தை அதிகளவு வாங்கினர். மேலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்தது. மீண்டும் ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாயை தொடும் அளவிற்கு நாள் தோறும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
gold rate
தொடர்ந்து உயரும் தங்கம்
தங்கத்தின் விலையானது கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7315க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
gold rate
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து 7340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 58ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.