3 நாட்களாக ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.! இன்று கிராம் விலை என்ன தெரியுமா.?
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை 58,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வகையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
Gold rate
உயரும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதன் படி தங்கத்தின் விலையானது தற்போது 58ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை உயர்வானது வரும் நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாயை எட்டிப்பார்த்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியது.
Gold Rate
மீண்டும், மீண்டும் அதிகரித்த தங்கம் விலை
இதன் படி 60ஆயிரம் ரூபாயை தொட்ட தங்கம் விலையானது அடுத்த சில நாட்களில் 4 ஆயிரம் ரூபாய் வரை குறைந்து 55ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்க டாலரில் ஏற்பட்ட மாற்றம் தங்கம் விலையின் மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. அதன் படி 800 ரூபாய் அதிகரித்தால் 400 ரூபாய் மட்டுமே குறைந்தது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்து வருகிறது.
gold rate
தங்கத்தின் மீதான முதலீடு
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு சவரனுக்கு 20ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள நகைப்பிரியர்கள் தற்போதே தங்கத்தை வாங்க நகைக்கடைகளில் கூடுகின்றனர். மேலும் தங்கத்தை வாங்கி வைப்பது சிறந்த முதலீடாகவும் மக்கள் பார்க்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் ஒரு சவரனுக்கு 22ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும் அவரச தேவைக்கு தங்க நகைகளை உடனடியாக அடகு மற்றும் விற்பனை செய்ய முடியும் என்ற காரணத்தால் மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்.
today gold rate in tamilnadu
58ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
இந்த நிலையில் கடந்த வாரம் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று தங்கத்தின் விலையானது அதிகரித்தது. அதன் படி கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 7,260 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 58ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது மீண்டும் 58ஆயிரம் ரூபாயை தொட்டது.
Gold rate
தங்கம் விலை இன்று
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது இன்றும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7285 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 58ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.