MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரிப்பு.! 3 நாளில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை

சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரிப்பு.! 3 நாளில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை

திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jan 03 2025, 10:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
gold rate

gold rate

தங்கத்தின் மீதான ஆர்வம்

தங்கம் என்றாலே இந்திய மக்களுக்கு அலாதி பிரியம்தான். திருமணங்கள், விஷேச நாட்களில் தங்கத்தின் பங்கு முக்கியம் வகிக்கிறது. எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் தங்கத்தை வாங்க வேண்டிய தேவை இந்திய மக்களிடம் உள்ளது.

தங்களது மகளின் திருமண தேவைக்காக அதிகளவில் தங்கம் வாங்க வேண்டிய நிலை உள்ளதால் நகைக்கடைகளில் தினமும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் இழப்பு ஏற்படாது என்ற காரணத்தால் அதிகளவில் தங்கத்தை வாங்கவும் மக்கள் விரும்புகிறார்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
gold rate

gold rate

திருமணத்தில் தங்கம்

இந்த நிலையில் தங்கம் அவரச தேவைக்கு உதவும் நண்பனாகவும் இருந்து வருகிறது. வீடு, கார், நிலம் உள்ளிட்ட பொருட்களை உடனடியாக விற்க முடியாத நிலை உள்ளது. எனவே தங்கத்தை பொறுத்தவரை உடனடியாக விற்கவோ அடகு வைக்கவோ முடியும். இதனால் எந்தவித அவரச தேவைக்கும் தங்க நகை உதவியாக உள்ளது. இந்த காரணத்தாலும் தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்கி சேமித்து வைக்கிறார்கள். 

35
gold rate

gold rate

தங்கம் விலை உயர்வு

மேலும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடரும் பட்சத்தில் தங்கத்தின் விலையானது  முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு புதிய உச்சத்தை எட்டக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது. கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் ஒரு சவரனுக்கு 22 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. 
 

45
gold rate

gold rate

அதிகரித்த தங்கம் விலை

2025ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியது. முதல் நாள்  கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.57,200 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,180 ரூபாய்க்கும்,  ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 57,440 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த  இரண்டு நாட்களில் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

55
gold rate

gold rate

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் அதிகரித்து 7260 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து  58ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 1200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.25,000 பென்ஷன் ரூ.87,500 ஆக உயருமா? ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Recommended image3
Bonus: கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ்.! 44,573 பேருக்கு ரூ.49.69 கோடி – யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved