தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இன்று இவ்வளவு உயர்வா.?
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், மக்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தின் விலை உயர்வு நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏறி இறங்கி வருகிறது.
gold rate
தங்கம் முதலீடு- அலைமோதும் கூட்டம்
தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. தங்கத்தின் மீது முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் அதிகளவு தங்கத்தை மக்கள் வாங்க விரும்புகிறார்கள். மேலும் தங்க நகைகளை கைவசம் வைத்திருந்தால் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும், குறிப்பாக மருத்து மற்றும் கல்வி தேவைகளுக்கு நகைகளை அடகு வைக்கவோ, விற்பனை செய்யவோ எளிதாக முடியும். எனவே தங்கத்தை வாங்க நடுத்தர வர்க்க மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
gold rate
உச்சத்தை தொடும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 10ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனையான தங்கம் விலையானது தற்போது 60ஆயிரம் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர வாய்ப்பு இருப்பாதகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் அதிகளவு தங்கத்தை வைத்திருப்பவர்களே கோடீஸ்வரர்களாக கருதப்படும் நிலை உருவாகும் என கூறுகின்றனர்.
gold rate
ஏறி இறங்கும் தங்கம் விலை
இந்த நிலையில் தான் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏறி இறங்கி வருகிறது. அதன் படி அக்டோபர் 31ஆம் தேதி 59ஆயிரத்து 600 ரூபாயை தொட்டது. அடுத்த சில நாட்களிலேயே 4ஆயிரம் ரூபாய் குறைந்த தங்கம் மீண்டும் அதிகரித்தது வருகிறது.
வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமை ஒரு கிராம் 7100 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 7,090 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 56ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
gold rate
இன்றைய தங்கம் விலை
நேற்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்தது அதன் படி கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7100 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 56,800 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்று 25 ரூபாய் அதிகரித்து 7125 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 57ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.